முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வேறு பட்ட கண்ணோட்டம்

ஒரு ஏழை மனிதன் தன்னுடைய குடும்பத்தினருக்காக, கடினமான முயற்சி எடுத்து ஒரு வீட்டைக் கட்டினான். ஒவ்வொரு ரூபாயாக சிறுகச் சிறுக சேர்த்து, 20 வருடங்களுக்குப் பிறகு வீட்டைக் கட்டி முடிக்கிறான். எனவே, அவரது குடும்பம் அந்த குடிசையில் இருந்து வெளியேறி பெரிய வீட்டில் குடியேறி மகிழ்ச்சியாக இருக்கப் போகிறார்கள்.         இறுதியாக ஒரு நாள் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு தயார் ஆனது. எல்லோரும் சேர்ந்து ஆலோசித்து, ஒரு விஷேசமான நாளை, புதுமனை புகுவிழாவிற்காக முடிவு செய்தார்கள்.        ஆனால், விழாவுக்கு 2 நாட்களுக்கும் முன்னால், ஏற்பட்ட நில நடுக்கத்தால், அந்த வீடு முழுவதுமாக இடிந்து விழுந்து போய் விட்டது.        இந்த சம்பவத்தைப் பற்றி தெரிந்தவுடன், அந்த ஏழை மனிதர் மார்க்கெட்டுக்கு ஓடிச் சென்று இனிப்புகள் வாங்கி வந்தார். வீடு இடிந்து கிடந்த இடத்திற்கு இனிப்புகளோடு சென்றார். அங்கு நிறைய பேர் திரண்டு நின்று, அவர்களது வருத்தத்தை வெளிப்படுத்திக் கொண்டு நின்றனர். இந்த சம்பவம் நடந்ததற்கு இரங...

தமிழ்நாடு அரசின் வீடு கட்ட புதிய விதிகள்

Click here to Download the File 

கடவுளின் மீதுள்ள நம்பிக்கை

ஒரு மனிதன் தன் மகனுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டு இருந்தான். அவர்கள் இருவரும் சமுத்திரத்தில், ஒரு படகில் பயணம் செய்து கொண்டு இருந்தனர். திடீரென்று மிகப்பெரிய புயல் ஒன்று வந்தது. அந்த மனிதர் ஒரு போர் வீரர். அவர் அப்படியே அமைதியாக இருந்தார். ஆனால் அவரது மகனோ, மிகவும் பயந்து போய்விட்டார். கிட்டத்தட்ட நம்பிக்கை இழந்து விட்டவர் போல தோற்றமளித்தார்.அவர்கள் இருவரும் பயணம் செய்து கொண்டிருந்த படகு மிகவும் சிறியது; மேலும் அந்தப் புயல் உண்மையிலேயே வலிமையுடையதாக இருந்தது. எந்தக் கணத்திலும் அவர்கள் புயலில் மூழ்கி விடுவதற்கான வாய்ப்பில் இருந்தார்கள்.      .அதிகமான அளவில் மகன் பயந்து கொண்டு இருக்கும் போது, அவனது அப்பா அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். எதுவுமே நடக்காதது போல, முழுவதுமாக அமைதியோடு சலனமற்று இருந்தார்.       அந்த நடுங்கிக் பயத்தால் நடுங்கிக் கொண்டே அப்பாவைப் பார்த்து,  “நீங்கள் பயப்படவில்லையா ? நமது வாழ்க்கையின் கடைசி நேரம் இதுவாகத்தான் இருக்கும்.        நாம் இருவரும் கரையை சென்று அடைவோம்...

எஜமானருடைய ஸ்கூட்டர்

பிரவீன் பார்த்தி ஒரு ஆசிரியர். அவர் வழக்கமாக ஆரம்பப் பள்ளி வகுப்புக் குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுப்பவர். அவரது கிராமத்திலிருந்து அவரது பள்ளிக் கூடம் 7 கி.மீ. தொலைவில் இருந்தது. அந்தப் பள்ளிக் கூடத்தைச் சுற்றிலும் முழுவதுமே ஒன்றும் கிடையாது. மரம், தாவரம், செடி, கொடி, புல் பூண்டு எதுவுமே இல்லாமல் ஒரு பாலைவனம் போல தோற்றம் அளிக்கும்.       அவரது கிராமத்தில் இருந்து பள்ளியை சென்று அடைவதற்கு எப்போதாவது போக்குவரத்து வசதி கிடைக்கும். எனவே, அவர் அடிக்கடி வழக்கமாக யாரிடமாவது ‘லிப்ட்’ கேட்டுச் செல்வார். லிப்ட் கிடைக்காத அந்த நாட்களில் எல்லாம் அவர் நடந்தே செல்வார். நமக்குக் கடவுள் கொடுத்த இரண்டு கால்கள் இருக்கின்றன. எப்போது அது தேவையோ அதைப் பயன்படுத்தச் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டே நடந்து செல்வார்.        ஒவ்வொரு நாளும் லிப்டுக்காக காத்திருக்கும் போது, அவர் வழக்கமாக நினைப்பது உண்டு, “ஏன் இந்த அரசாங்கம் ஆட்களே வசிக்காத ஒரு பகுதியில், பள்ளிக் கூடத்தை திறந்து இருக்கிறார்கள்?  ...

இருளில் ஒரு விருந்து

தயவு செய்து இந்த உண்மையான கதை முழுவதையும் இன்று நீங்கள் கண்களை மூடுவதற்கு முன்பாகவும், நாளை அதனை திறப்பதற்கு முன்பாகவும் வாசித்து விடுங்கள். யாரோ ஒருவருடைய அதிசயமான அனுபவம் இங்கே பகிர்ந்து கொள்ளப் பட்டது.    பார்வை இழந்தோர் மையத்தில் நடக்கும், பார்வை இழந்தோரின் நன்மைக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளச் சென்றேன்.   வழக்கம் போல, அந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலையில் நடப்பதாக இருந்த காரணத்தால், நான் முதலில் அந்த நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என நினைத்தேன். இது போரடிக்கும் நிகழ்ச்சியாக இருக்கக் கூடும் என்பதால், நான் அன்று மாலைப் பொழுதை உற்சாகமாக வேறு விதமாக செலவிடலாம் என்று நினைத்தேன்.   தனியாக இருப்பதாலும், நேரத்தை எப்படி செலவழிப்பது என தெரியாததாலும் முடிவாக இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அங்கு செல்வதற்காக ஆன்லனில் புக் பண்ணி, ரிஜிஸ்டர் செய்தேன்.    நான் அங்கு சென்ற போது, ஏறக்குறைய 40 பேர் இருந்தனர். முதன் முதலில், எங்களுக்கு ஒரு வீடியோ காண்பிக்கப்பட்டது. அது அந்த மையத்தைப் பற்றியது. 15 நிமிட வீடியோ அது. அது மிகவும் ஈர்க்கும்படியாக இருந்தத...

சூஃபி ஞானியின் பிரார்த்தனையும் சீடரின் கேள்வியும்

முன்னொரு காலத்தில் சூஃபி மறைஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வழக்கமாக தன் பிரார்த்தனையை இப்படி செய்வார் –“கடவுளே, நீ எனக்கு செய்யும் அனைத்திற்கும் நான் நன்றி கூறுகிறேன். நீங்கள் செய்யும் நன்மைகளை என்னால் எப்போதாவது திருப்பிக் கொடுக்க முடியுமா? நான் நன்றியுணர்வை மிகவும் உணர்கிறேன்”.      ஒரு முறை அவர் வெகு தூரம் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது தொடர்ந்து மூன்று நாட்களாக அங்கிருந்த மக்கள் இவருக்கு தங்க இடம் கொடுக்க மறுத்தனர். இவர் நல்ல மனிதர் என அவர்கள் நம்பவும் மறுத்தனர். அவருக்கு உணவும், தண்ணீரும் கூட கொடுக்க மறுத்தனர். அந்த மூன்று நாட்கள் முழுவதும் பசியோடும், தாகத்தோடும் சுற்றி அலைந்து கொண்டிருந்தார்.      மூன்று நாட்களாக பசியும், தாகமும் வாட்டிய போதும் கூட பிரார்த்தனையைத் தொடர்ந்தார். அவர் இரவில்,“ கடவுளே நன்றி ! என்னால் எப்படித் திருப்பிக் கொடுக்க முடியும் ? நான், நன்றியுணர்வை மிகவும் உணர்கிறேன்.”      அவருடன் பயணம் செய்த சீடர்களில் ஒருவர், இவர் இவ்வாறு பிரார்த்தனை செய்வதை பார்த்து விட்டு, குருவே, தயவு செய்து ...

தமிழ் எழுத்துக்களில் உள்ள தந்திரம்

தமிழ் மகத்துவம் ⭐தமிழ் எழுத்துக்களில் உள்ள தந்திரம்⭐ 😌 ஓர் சுருக்கமான பதிவு 👉👉தமிழில் மொத்தம் எழுத்துக்கள் 247 உயிர் எழுத்துக்கள் 12 மெய் எழுத்துக்கள் 18 உயிர் மெய் எழுத்துக்கள் 216 ஆய்த எழுத்து 1 🌹உயிர் எழுத்துக்கள் என்பது உயிரின் உற்பத்தி சக்தியை அதிகபடுத்தும். ☘மெய் எழுத்துக்கள் என்பது மனதை அறிய கூடிய மற்றும் வலுப்படுத்தும் சக்தியாக உள்ளது. 🔥உயிர் மெய் எழுத்துக்கள் என்பது உடலையும் மனதையும் சேர்த்து இறைவனை அறிய கூடிய செயலை காட்டும். 👉ஓம் என்பதில் உள்ள அ உ ம் என்பது என்ன என்ன எழுத்துகள் உள்ளன கவனிக்க 👉நாம் பேசும் தமிழ் தானாக வரவில்லை மூன்று நபர்களின் கண்டுபிடிப்பால் வந்தது அதாவது சிவன்,முருகன்,அகத்தியர் கொண்டு உருவாக்கபட்டது 🔥சிவனால் முருகனுக்கு கொடுக்கப்பட்ட பணி தமிழ் மொழியை உருவாக்குவது ☀முருக பெருமான் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து உருவாக்கியுள்ளார். 👉ஆனால் அதில் வரைமுறை இல்லாமல் இருந்தது அதை சரி செய்ய அப்பணி மீண்டும் அகத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டது. 👳அகத்தியர் அதை இலக்கணம் செய்து வெளியிட்டார். 👉இப்போது தமிழ் எழுத்துக்கு வருவோம் 🌞மானிடர் நாள் முழுதும் சுவா...