- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
💐💐💐🙏🏻🌹🌹🌹🌹🌹 *"இன்றைய சிந்தனை"*.( 16.01.2026 ) ............................... *"’’..* .................................. உழவர் தினம் (மாட்டுப் பொங்கல்) என்பது தைப்பொங்கலின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா தமிழர்களால் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழவனின் உயிர்த் தோழானாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றி நன்றி கூறும் நோக்கோடு பொங்கி, விருந்து படைத்து, நன்றி கடன் செய்யப் பெறும் நிகழ்வே மாட்டும் பொங்கலாகும். மாட்டுப் பொங்கலின் அன்று வேளாண்மைக்கு உதவும் மாடுகளின் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கால் நடைகளை குளிப்பாட்டுவர். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டி விடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். புதிய மூக்கணாங்கயிறு, தாம்புக் கயிறு , உழவுக் கருவிகளை சுத்தம் ...