முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உழவர் திருநாளாம் மாட்டுப் பொங்கல்

💐💐💐🙏🏻🌹🌹🌹🌹🌹 *"இன்றைய சிந்தனை"*.( 16.01.2026 )
...............................

*"’’..*
..................................

உழவர் தினம் (மாட்டுப் பொங்கல்) என்பது தைப்பொங்கலின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். 

உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா தமிழர்களால் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உழவனின் உயிர்த் தோழானாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றி நன்றி கூறும் நோக்கோடு பொங்கி, விருந்து படைத்து, நன்றி கடன் செய்யப் பெறும் நிகழ்வே மாட்டும் பொங்கலாகும். 

மாட்டுப் பொங்கலின் அன்று வேளாண்மைக்கு உதவும் மாடுகளின் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கால் நடைகளை குளிப்பாட்டுவர். 

மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டி விடுவார்கள். 

கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். 

 புதிய மூக்கணாங்கயிறு, தாம்புக் கயிறு , உழவுக் கருவிகளை சுத்தம் செய்து வைப்பார்கள். 

விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந் நாளாகும். 

'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர். 

தற்காலத்தில் விவசாய உற்பத்தில் பலவிதமான இயந்திரங்கள் வந்துள்ள காரணத்தால் மாடுகளின் தேவை குறைந்துள்ள போதிலும் நம் மூதாதையினர் செய்து வந்த மாட்டுப் பொங்கல் விழா கிராம புறங்களில் மட்டுமே தற்போது கொண்டாடப் பெற்று வருகின்றது.

*ஆம்.,நண்பர்களே..*
மாடுகள் சேத்தில் கால் வைத்து உழவு செய்தால்தான், நாம் சோற்றில் கூட கை வைக்க முடியும். 

எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பாராமல் நம்மை ஒவ்வொரு நாளும் வாழ வைத்து வரும் உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு இந்நாளில் நன்றி கூறுவோம்............🌹🌹🌹🙏🏻💐💐💐💐💐💐

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...

புரட்சிகர மேதின நல்வாழ்த்துகள்

மே தினம் ஒரு தீபாவளி போல் புத்தாண்டு போல் ஒரு நாள் விடுமுறை களிப்பில் கரைந்து போகும் நாளா மேதினம்  நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டி சிறப்பு திரைப்படம்  பட்டி மன்றம்  குத்துப்பாட்டு கும்மாளம் என டிவி முன் கடந்து போகும் வழக்கமான பண்டிகை போன்றதா மே தினம் டாஸ்மாக் பார்களில் நண்பர்களோடு மயங்கிக் களிக்கவா இந்த மே தினம் திங்கட்கிழமையில் வந்ததால் சனி ஞாயிறையும் சேர்த்து மூன்று நாள் சுற்றுலாத் திட்டத்தில் அடங்கிப் போகும்  எளிய கேளிக்கை தகுதியுடையதா அது சினிமா தியேட்டரிலும் ஷாப்பிங் மால்களிலும் கூடி மாலையில் KFC யில் கோழிக்கால் கடிக்கும் குதூகலத்திற்கு கிடைத்த வாய்ப்பா மே நாள் விடுமுறை  ஒரு புத்தாண்டைப் போல் பரஸ்பரம் Happy may day சொல்லி கடக்கவா இந்நாள் உழைக்கும் மக்கள் சிந்திய உதிரத்தில் உதித்த தினமல்லவா இந்த மே தினம் அதில் தோய்ந்து உலகெங்கும் பறக்கும் செங்கொடியில் அதன் ரத்தக் கவிச்சி இன்னுமல்லவா இருக்கிறது அது நமது சென்ற நூற்றாண்டு பாட்டன்கள் பாட்டிகள் உயிர் மாய்ந்து  சிக்காகோ நகர வீதிகளில் சிந்திய உதிரமல்லவா  8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உ...

இனிய பராபவ தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

கடந்த  வருடங்களில்  அனைத்திலும்  நடந்த  யாவையும் மறந்து 💜🔥 நேற்று  வரை  மனக்கசப்பு , கஷ்டம் , கவலை யாவும்  பூத்து  உதிர்ந்த  மலராய் 💜🔥 இன்று  தொடங்கும் புது  வருடத்தில்  புதிதாய்  பிறந்த  மழலையாய்  புன்னகையுடன் 💜🔥 சுட்டெரிக்கும்  சூரியனையும்  சக்கரை பொங்கலிட்டு 💜🔥 பலவிதமான  மனிதரை  பலவிதமான  எண்ணங்களை  பலவிதமான உணர்வுகளை  சிரித்தே கடந்து 💜🔥 பலவிதமான கனிகளை  இறைவனுக்கு படைத்து 💜🔥 நீண்ட  ஆயுளும்  நிறை செல்வமுமாய்  மனநிம்மதியுடன் 💜🔥 சித்திர குப்தனை வணங்கி  தித்திக்கும் சித்திரையை  சிறப்புடனே வரவேற்போம் 💜🔥 அனைவருக்கும் #சித்திரை  திருநாள் நல்வாழ்த்துகள் 💜🔥