முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுளின் மீதுள்ள நம்பிக்கை

ஒரு மனிதன் தன் மகனுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டு இருந்தான். அவர்கள் இருவரும் சமுத்திரத்தில், ஒரு படகில் பயணம் செய்து கொண்டு இருந்தனர். திடீரென்று மிகப்பெரிய புயல் ஒன்று வந்தது. அந்த மனிதர் ஒரு போர் வீரர். அவர் அப்படியே அமைதியாக இருந்தார். ஆனால் அவரது மகனோ, மிகவும் பயந்து போய்விட்டார். கிட்டத்தட்ட நம்பிக்கை இழந்து விட்டவர் போல தோற்றமளித்தார்.அவர்கள் இருவரும் பயணம் செய்து கொண்டிருந்த படகு மிகவும் சிறியது; மேலும் அந்தப் புயல் உண்மையிலேயே வலிமையுடையதாக இருந்தது. எந்தக் கணத்திலும் அவர்கள் புயலில் மூழ்கி விடுவதற்கான வாய்ப்பில் இருந்தார்கள்.   

  .அதிகமான அளவில் மகன் பயந்து கொண்டு இருக்கும் போது, அவனது அப்பா அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். எதுவுமே நடக்காதது போல, முழுவதுமாக அமைதியோடு சலனமற்று இருந்தார்.   


   அந்த நடுங்கிக் பயத்தால் நடுங்கிக் கொண்டே அப்பாவைப் பார்த்து, 
“நீங்கள் பயப்படவில்லையா ? நமது வாழ்க்கையின் கடைசி நேரம் இதுவாகத்தான் இருக்கும்.   

    நாம் இருவரும் கரையை சென்று அடைவோம் என்று தெரியவில்லை. ஏதாவது ஒரு அதிசயம் இந்தக் கணத்தில் நடந்து நம்மைக் காப்பாற்றினால் மட்டுமே உண்டு. இல்லையெனில் நாம் மரணமடைவது உறுதி.  

   அவன் தொடரும் போது, ஒரு அலை வேகமாக வந்து படகைத் தாக்கியது. அவன் பயத்தில் கத்தினான். “உனக்கு பயமே இல்லையா ?”

  தன்னுடைய மகனை கவனித்துக் கொண்டிருந்த பிறகு, அப்பா சிரித்தார். அவருடைய வாளை உறையில் இருந்து வெளியே எடுத்தார்.

   அவனுடைய அப்பா செய்து கொண்டிருப்பதைப் பார்த்து, இப்போது மகனுக்கு மேலும் வியப்பாக இருந்தது.   


   அப்பா, மகனின் கழுத்துக்கு மிக நெருக்கமாக வாளைக் கொண்டு சென்றார். மிக நெருக்கமாக, வாளுக்கும் கழுத்துக்கும் இடையே மயிரிழை அளவு தூரம்தான் இருந்தது. அந்த வாள் கிட்டத்தட்ட அவன் கழுத்தை தொட்டுக் கொண்டு இருந்தது.    

  இப்போது, அப்பா மகனைப் பார்த்து, “நீ பயப்படுகிறாயா ?” என்று கேட்டார். 

  மகன் சிரித்துக் கொண்டே, “நான் ஏன் பயப்பட வேண்டும்? நீங்கள் என்னுடைய அப்பா. வாள் உங்கள் கையில் இருக்கிறது. நீங்கள் ஒரு போதும் என்னை துன்புறுத்த மாட்டீர்கள். மேலும், நீங்கள் என்னை நேசிக்கின்றீர்கள்” என்பதுவும் எனக்குத் தெரியும்.  

   அப்பா வாளை மீண்டும் உறையில் போட்டு விட்டு கூறினார், “இதுதான் என்னுடைய பதில், என் அன்பு மகனே! எனக்குத் தெரியும் கடவுள் என்னை நேசிக்கிறார்; இந்த புயலும் அவர் கையில்தான் இருக்கிறது.    

  ஆகவே எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ, அது நன்றாகவே நடக்கும். நாம் உயிரோடு இருப்பதுவும் நல்லதே, அல்லது இல்லாமல் இருப்பது என்றால் அதுவும் நல்லதே. ஏனென்றால் அனைத்துமே கடவுளின் கைகளில்தான் உள்ளது. அவர் தவறானதை எப்போதுமே செய்ய மாட்டார்.   

  நம்பிக்கையை உருவாக்கிக் கொள். இதுவே வாழ்க்கை முழுவதும் உன்னை தன்மை மாற்றம் அடைய செய்ய தகுதியானது ஆகும். நம்பிக்கை என்றால் முழுமையாக வேண்டும். காரணம் என்னவெனில், அதற்குக் குறைவான எந்த ஒன்றும் பயன் இல்லாதது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...

புரட்சிகர மேதின நல்வாழ்த்துகள்

மே தினம் ஒரு தீபாவளி போல் புத்தாண்டு போல் ஒரு நாள் விடுமுறை களிப்பில் கரைந்து போகும் நாளா மேதினம்  நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டி சிறப்பு திரைப்படம்  பட்டி மன்றம்  குத்துப்பாட்டு கும்மாளம் என டிவி முன் கடந்து போகும் வழக்கமான பண்டிகை போன்றதா மே தினம் டாஸ்மாக் பார்களில் நண்பர்களோடு மயங்கிக் களிக்கவா இந்த மே தினம் திங்கட்கிழமையில் வந்ததால் சனி ஞாயிறையும் சேர்த்து மூன்று நாள் சுற்றுலாத் திட்டத்தில் அடங்கிப் போகும்  எளிய கேளிக்கை தகுதியுடையதா அது சினிமா தியேட்டரிலும் ஷாப்பிங் மால்களிலும் கூடி மாலையில் KFC யில் கோழிக்கால் கடிக்கும் குதூகலத்திற்கு கிடைத்த வாய்ப்பா மே நாள் விடுமுறை  ஒரு புத்தாண்டைப் போல் பரஸ்பரம் Happy may day சொல்லி கடக்கவா இந்நாள் உழைக்கும் மக்கள் சிந்திய உதிரத்தில் உதித்த தினமல்லவா இந்த மே தினம் அதில் தோய்ந்து உலகெங்கும் பறக்கும் செங்கொடியில் அதன் ரத்தக் கவிச்சி இன்னுமல்லவா இருக்கிறது அது நமது சென்ற நூற்றாண்டு பாட்டன்கள் பாட்டிகள் உயிர் மாய்ந்து  சிக்காகோ நகர வீதிகளில் சிந்திய உதிரமல்லவா  8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உ...

இனிய பராபவ தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

கடந்த  வருடங்களில்  அனைத்திலும்  நடந்த  யாவையும் மறந்து 💜🔥 நேற்று  வரை  மனக்கசப்பு , கஷ்டம் , கவலை யாவும்  பூத்து  உதிர்ந்த  மலராய் 💜🔥 இன்று  தொடங்கும் புது  வருடத்தில்  புதிதாய்  பிறந்த  மழலையாய்  புன்னகையுடன் 💜🔥 சுட்டெரிக்கும்  சூரியனையும்  சக்கரை பொங்கலிட்டு 💜🔥 பலவிதமான  மனிதரை  பலவிதமான  எண்ணங்களை  பலவிதமான உணர்வுகளை  சிரித்தே கடந்து 💜🔥 பலவிதமான கனிகளை  இறைவனுக்கு படைத்து 💜🔥 நீண்ட  ஆயுளும்  நிறை செல்வமுமாய்  மனநிம்மதியுடன் 💜🔥 சித்திர குப்தனை வணங்கி  தித்திக்கும் சித்திரையை  சிறப்புடனே வரவேற்போம் 💜🔥 அனைவருக்கும் #சித்திரை  திருநாள் நல்வாழ்த்துகள் 💜🔥