முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சூஃபி ஞானியின் பிரார்த்தனையும் சீடரின் கேள்வியும்

முன்னொரு காலத்தில் சூஃபி மறைஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வழக்கமாக தன் பிரார்த்தனையை இப்படி செய்வார் –“கடவுளே, நீ எனக்கு செய்யும் அனைத்திற்கும் நான் நன்றி கூறுகிறேன். நீங்கள் செய்யும் நன்மைகளை என்னால் எப்போதாவது திருப்பிக் கொடுக்க முடியுமா? நான் நன்றியுணர்வை மிகவும் உணர்கிறேன்”.  

   ஒரு முறை அவர் வெகு தூரம் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது தொடர்ந்து மூன்று நாட்களாக அங்கிருந்த மக்கள் இவருக்கு தங்க இடம் கொடுக்க மறுத்தனர். இவர் நல்ல மனிதர் என அவர்கள் நம்பவும் மறுத்தனர். அவருக்கு உணவும், தண்ணீரும் கூட கொடுக்க மறுத்தனர். அந்த மூன்று நாட்கள் முழுவதும் பசியோடும், தாகத்தோடும் சுற்றி அலைந்து கொண்டிருந்தார்.   

  மூன்று நாட்களாக பசியும், தாகமும் வாட்டிய போதும் கூட பிரார்த்தனையைத் தொடர்ந்தார். அவர் இரவில்,“ கடவுளே நன்றி ! என்னால் எப்படித் திருப்பிக் கொடுக்க முடியும் ? நான், நன்றியுணர்வை மிகவும் உணர்கிறேன்.”
   
 அவருடன் பயணம் செய்த சீடர்களில் ஒருவர், இவர் இவ்வாறு பிரார்த்தனை செய்வதை பார்த்து விட்டு, குருவே, தயவு செய்து நான் சிறிது பேசலாமா? என்றார். நீங்கள் எதற்காக நன்றி கூறிக் கொண்டு இருக்கிறீர்கள்? மூன்று நாட்களாக நாம் தங்குவதற்கு இடமும் இல்லாமல், பசியோடும், தாகத்தோடும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறோம். இந்த காட்டு விலங்குகளின் கருணையினால் நாம் இருக்கிறோம். ஆகவே என்ன காரணத்திற்காக நீங்கள் நன்றியுணர்வோடு இருக்கிறீர்கள்?    

   அந்த மறை ஞானி புன்சிரிப்போடு கூறினார், “உன்னால் இதைப் புரிந்து கொள்ள முடியாது - மூன்று நாட்களாக உண்ணவும், குடிக்கவும் ஏதும் இல்லாமல் இருப்பது என்பது, எனக்குக் கண்டிப்பாகத் தேவைப்பட்டு இருக்கிறது. கடவுள் எனக்கு என்ன தேவையோ அதை எப்போதும் கொடுப்பார். இந்த பசியும், தாகமும் எனக்குத் தேவைப் பட்டதால் அதையும் கொடுத்து விட்டார். 

  இந்த மூன்று நாட்களும் எனக்குத் தேவைப் பட்ட நேரமாக இருந்திருக்கிறது, இல்லை எனில் ‘அவர்’ இதை எனக்கு கொடுத்திருக்க மாட்டார். இதற்காக நான் மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.   

 கடவுள் எப்போதுமே என்னைப் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார். என்னுடைய ஆசைகளைப் பற்றி அவர் கவலைப் படுவது இல்லை. எனக்கு எது சரியான தேவை என்பதை உணர்ந்து அதை எனக்குக் கொடுப்பார். 

  நான் அவருக்கு நன்றி கூறிக் கொண்டு இருக்கிறேன். ஏனென்றால், உணவு இல்லாமல், தண்ணீர் இல்லாமல், தங்க இடம் இல்லாமல், மூன்று நாட்களாக பாலை வனத்தில், திறந்த வெளியில், வானத்து நட்சத்திரங்களின் அடியில், தூங்கிக் கொண்டு இருக்கும் போதும் கூட, நம்மை எந்த காட்டு விலங்குகளும் தாக்கவில்லை.

  நீ வருத்தப்படுகிறாயா? எதற்காக? இதுதான் நமது உண்மையான தேவையாக இருந்திருக்கிறது!

  இதுதான், உண்மையான பற்றுறுதி என்பது. இது இதயபூர்வமான நன்றியுணர்வு. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு சூழலையும் மகிழ்ச்சியாக்கிக் கொண்டு வாழ்வதுதான் ஒரு உண்மையான இதயத்தின் பெருந்தன்மையாகும். பெருந்தன்மையான இதயம் கொண்ட ஒரு மனிதனால், தன் வாழ்க்கையின் உண்மையான லட்சியத்தை நோக்கி முன்னேற முடியும்.    

  இப்போது அந்த சீடரின் முகத்தில் திருப்தி தென்பட்டது. லட்சியத்தை நோக்கி முன்னேறுவதற்கான ரகசியத்தை குருவின் இந்த வார்த்தைகள் அவருக்கு வெளிப்படுத்தின. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...

புரட்சிகர மேதின நல்வாழ்த்துகள்

மே தினம் ஒரு தீபாவளி போல் புத்தாண்டு போல் ஒரு நாள் விடுமுறை களிப்பில் கரைந்து போகும் நாளா மேதினம்  நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டி சிறப்பு திரைப்படம்  பட்டி மன்றம்  குத்துப்பாட்டு கும்மாளம் என டிவி முன் கடந்து போகும் வழக்கமான பண்டிகை போன்றதா மே தினம் டாஸ்மாக் பார்களில் நண்பர்களோடு மயங்கிக் களிக்கவா இந்த மே தினம் திங்கட்கிழமையில் வந்ததால் சனி ஞாயிறையும் சேர்த்து மூன்று நாள் சுற்றுலாத் திட்டத்தில் அடங்கிப் போகும்  எளிய கேளிக்கை தகுதியுடையதா அது சினிமா தியேட்டரிலும் ஷாப்பிங் மால்களிலும் கூடி மாலையில் KFC யில் கோழிக்கால் கடிக்கும் குதூகலத்திற்கு கிடைத்த வாய்ப்பா மே நாள் விடுமுறை  ஒரு புத்தாண்டைப் போல் பரஸ்பரம் Happy may day சொல்லி கடக்கவா இந்நாள் உழைக்கும் மக்கள் சிந்திய உதிரத்தில் உதித்த தினமல்லவா இந்த மே தினம் அதில் தோய்ந்து உலகெங்கும் பறக்கும் செங்கொடியில் அதன் ரத்தக் கவிச்சி இன்னுமல்லவா இருக்கிறது அது நமது சென்ற நூற்றாண்டு பாட்டன்கள் பாட்டிகள் உயிர் மாய்ந்து  சிக்காகோ நகர வீதிகளில் சிந்திய உதிரமல்லவா  8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உ...

இனிய பராபவ தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

கடந்த  வருடங்களில்  அனைத்திலும்  நடந்த  யாவையும் மறந்து 💜🔥 நேற்று  வரை  மனக்கசப்பு , கஷ்டம் , கவலை யாவும்  பூத்து  உதிர்ந்த  மலராய் 💜🔥 இன்று  தொடங்கும் புது  வருடத்தில்  புதிதாய்  பிறந்த  மழலையாய்  புன்னகையுடன் 💜🔥 சுட்டெரிக்கும்  சூரியனையும்  சக்கரை பொங்கலிட்டு 💜🔥 பலவிதமான  மனிதரை  பலவிதமான  எண்ணங்களை  பலவிதமான உணர்வுகளை  சிரித்தே கடந்து 💜🔥 பலவிதமான கனிகளை  இறைவனுக்கு படைத்து 💜🔥 நீண்ட  ஆயுளும்  நிறை செல்வமுமாய்  மனநிம்மதியுடன் 💜🔥 சித்திர குப்தனை வணங்கி  தித்திக்கும் சித்திரையை  சிறப்புடனே வரவேற்போம் 💜🔥 அனைவருக்கும் #சித்திரை  திருநாள் நல்வாழ்த்துகள் 💜🔥