முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நான் முதல்வன் திட்டத்தில் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிக்கு ஜூலை 14இல் நுழைவுத்தேர்வு.

மத்திய அரசின் இலவச போட்டித்தேர்வுப் பயிற்சி- ஜூலை 17இல் நுழைவுத்தேர்வு. மத்திய அரசின் SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி வழங்குகிறது தமிழ்நாடு அரசு. நான் முதல்வன் திட்டத்தில் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிக்கு ஜூலை 14இல் நுழைவுத்தேர்வு. நுழைவுத்தேர்வுக்கு www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 23 வரை விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறுவோருக்கு 6 மாத உறைவிட பயிற்சி தரப்படும்.

ஒரு சோதனை

அந்த  பள்ளிக் கூடத்தில் வகுப்பு ஆசிரியர் தன் வகுப்பில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் ஒரு சுவை மிக்க சாக்லேட் கொடுத்தார். ஒரு விசித்திரமான நிபந்தனையை விதித்தார். “குழந்தைகளே,  கவனியுங்கள்! உங்கள் கையில் இருக்கும் சாக்லேட்டை 10 நிமிடங்கள் சாப்பிடாமல் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.” இவ்வாறு கூறிவிட்டு வகுப்பறையை விட்டு வெளியேறினார்.     வகுப்பு அறை முழுவதும் ஒரு கணம் அமைதி நிலவியது. எல்லா குழந்தைகளும் தங்கள் முன் இருக்கும் சாக்லேட்டை திகைப்போடு பார்க்கலாயினர்.   சாக்லேட்டை சாப்பிட வேண்டிய ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வந்தது; அவர்களால் அதைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை;  மிகவும் கஷ்டப்பட்டார்கள்.     10 நிமிடங்கள் கழிந்ததும்,  ஆசிரியர் வகுப்பின் உள்ளே நுழைந்தார்.    இருக்கும் நிலைமையை ஆய்வு செய்தார்; ஒன்றைக் கண்டு பிடித்தார். ஒட்டு மொத்த வகுப்பில், 7 குழந்தைகள் மட்டுமே சாக்லேட்டை சாப்பிடாமல் அப்படியே வைத்து இருந்தார்கள் மற்ற குழந்தைகள் அனைவரும் சாக்லேட்டை சாப்பிட்டு முடித்த பின், அதன் நிறங்கள் பற்றியும், சு...

வாழ்க்கையில் மேன்மை அடைவதற்கான சந்தர்ப்பம் :

ஒரு கிராமத்தில் ஒரு சிற்பி வாழ்ந்து வந்தார். அழகான சிற்பங்களைச் செய்வது அவர் வழக்கம். இந்த வேலையின் உதவியால் கிடைத்த வருமானத்தில், ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தார். சிறிது காலத்திற்கு பிறகு, அவரது மகனும் இதே சிற்ப வேலையை தன்னுடைய இளம் வயதிலேயே செய்யத் தொடங்கினான். அவனது சிற்பங்களும் மிக அழகாகவே இருந்தன. தன் மகனின் தொழில் திறமையைப் பார்த்துத் தந்தை மகிழ்ச்சி அடைந்தார். ஆனாலும் தந்தை, மகனின் ஒவ்வொரு சிற்பத்திலும் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டுவார். அவர் தன் மகனிடம், ‘நீ நன்றாக செய்கிறாய். அடுத்த முறை இந்த குற்றமும் வராமல் பார்த்துக் கொள்ள முயற்சி செய்’ என்று சொன்னார். தந்தையின் அறிவுரைக்கு மகன் எதுவும் மறுத்துச் சொல்ல மாட்டார். அப்பாவின் அறிவுரையை பின்பற்றி, தன் சிற்ப வேலையில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு இருந்தார். அதன் விளைவாக, மகனது சிற்பங்கள் தந்தையின் சிற்பங்களை விட மேன்மையுடையதாக ஆகியது . மக்கள் மகனின் சிற்பங்களை அதிக விலை கொடுத்து வாங்கும்படியான நேரமும் வந்து விட்டது. அதே நேரத்தில், தந்தையின் சிற்பங்கள் முன்பு இருந்த அதே விலையில்தான் தொடர்ந்து விற்கப...

பெண் குழந்தைகளுக்கான அழகான 68 முருகன் பெயர்கள்

1. சஷ்டிகா - Sastika 2. விசாகா - Visaka 3. க்ரித்திகா - Krithika 4. சக்திதாரா - Sakthithara 5. கார்த்திகா - Karthika 6. மயூரி - Mayuri 7. எழில்வெண்பா - Ezhilvenba 8. மயிலினி - Mayilini 9. விசாலினி - Visalini 10. வேலவர்ஷினி - Velavarshini 11. நித்ரா - Nithra 12. அகநேத்ரா - Aganethra 13. அகமித்ரா - Agamithra 14. சஷ்டிப்ரதா - Sastiprada 15. சஷ்டிப்ரகதா - Sastipragatha 16. ப்ரணவி- Pranavi 17. மகிழ்வதனா - Magizhvadana 18. எழில்நேத்ரா - Ezhilnethra 19. யுகஸ்ரீ - Yugashree 20. பிரபவா - Prabhava 21. ஆத்மபுவிகா - Atmabhuvika 22. குகஸ்ரீ - Guhasree 23. மேகதர்ஷினி - Megadharshini 24. இளமயிலி - Ilamayili 25. வினுமித்ரா - Vinumithra 26. ஜயத்சேனா - Jeyatsena 27. வினுப்ரியா- Vinupriya 28. முகில்வெண்பா - Mukilvenba 29. எழில்மித்ரா - Ezhilmithra 30. யுகநேத்ரா - Yuganethra 31. கந்தஸ்ரீ - Kandashri 32. ஸ்கந்தவி - Skandavee 33. தணிகைவேதா - Thanigaiveda 34. தமாயா - Thamaya 35. நேத்ரா - Nethra 36. க்ரித்திக்ஷா - Krithiksha 37. விசாலினி - Vishalini 38. யுகப்ரதா - Yugapradha 39. வினுநேத்ரா - Vinun...

தோரணமலை முருகன்..!

🙏       இன்று   கிருத்திகை    தோரணமலை      முருகன்..!       🦚🙏🦚  **************** கோடி மலைகள் இருப்பினும் இம்மலைபோல் ஆகுமா..? முருக பக்தர் மனமெலாம் வணங்காமல் போகுமா..?               🦚 "தோரணமலை" உச்சியில் கோயில்கொண்டு வாழ்கிறான்.! முருகா முருகா என்போர்தம்மின் மனதில் வந்து ஆழ்கிறான்!                🦚 விண்ணைமுட்டும் மேகங்கள் இங்கு வந்து பணியிது.! பக்த ரோட ஆசைகள் இங்குவந்தால் தணியுது..!             🦚 தாரணியில் ஈதுமே தனித்துவம் மிக்கக் கோயிலு.! உலக மக்கள் போற்றிடும் ஆன்ம நேய வாயிலு..!              🦚 சித்தர்கள்வாழும் செம்மலை..! வாங்கபோலாம் இம்மலை..! குறுமுனியாம் அகத்தியர் தேரையரும் வாழ் மலை...!             🦚 காவடி ஆடிப் பாடியே..! நாடும் பக்தர் ஆழ் மலை.! ஆன்ற புகழ் அகத்தியர் தேரையரும் சேர்ந்துமே...!   ...

பதற்றம் வேண்டாமே

சிலர் எப்போதாவது பதற்றம் அடைகின்றனர்; சிலர் எடுத்ததற்கு எல்லாம் பதற்றம் அடைகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த பயம், அச்சம், பதற்றம் ஆகியவை நம்மை கீழே இழுக்கும் சக்திகளாகவே எப்போதும் இருந்து வருகிறது.  பயமான அல்லது இக்கட்டான சூழ்நிலைகளில் இருக்கும்போது, நாம் எல்லோருமே பதற்றம் (Anxiety) அடைந்து இருப்போம். இது இயற்கை... அதே சூழ் நிலைகள் நமக்குப் பழகும் போதோ, மாறும் போதோ அல்லது அதில் இருந்து விலகும் போதோ பதற்றமும், பயமும் நம்மை விட்டுப் போய் விடுகிறது... இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விலகிய பின்னும் பதற்றம் தொடர்ந்து நீடித்தாலோ, சட்டென காரணம் இல்லாமல் ஏற்பட்டாலோ அல்லது அதன் வீரியம் அதிகரித்தாலோ, அது அன்றாட வாழ்க்கை முறையில் பெருமளவில் பாதித்து உடல், மனநலக் கேடுகளை விளைவிக்கிறது... இருந்த போதிலும் ஓரளவு பதற்றம் நல்லதுதான். அன்றாட வாழ்க்கைக்கு அவசியமானதும்கூட...!  இது எதிர்பாராத விபத்திலிருந்தோ, தாக்குதலிலிருந்தோ நம்மைக் காப்பாற்றுவது மட்டுமின்றி, கவனத்துடன் இருக்கச் செய்து, வேலைகளைத் திறம்படச் செய்ய உதவுவதுடன், சிக்கல்களைச் சமாளிக்கத் தூண்டு கோலாகவும் இருக்கிறது... ஆனால்!, எல்லா நேரமு...

ஜூன் 4 - ஆக்கிரமிப்பால் பலியான அப்பாவிகுழந்தைகள் தினம்

ஜூன் 4 , ஆக்கிரமிப்பால் பலியான அப்பாவி குழந்தைகள் தினம் இன்று(International Day of Innocent Children Victims of Aggression). இனக்கலவரம்,, மதக்கலவரம், போர், வன்முறை போன்ற செயல்களால் அதிகம் பாதிக்கப்படுவது ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளும், பெண்களும் தான். போரின்போது பள்ளிக் கட்டிடங்களே குறிவைத்து தாக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள் பாதிக்கின்றனர். எடுத்துக்காட்டாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் பலியாகும் ஏராளமான அப்பாவி பாலஸ்தீனிய குழந்தைகளை கூறலாம் ஐ.நா.வின் முடிவுப்படி 1982 ஆம் ஆண்டிலிருந்து ஆக்கிரப்பால் பலியான அப்பாவிகுழந்தைகள் தினம் ஜூன் 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது..