முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு சோதனை

அந்த  பள்ளிக் கூடத்தில் வகுப்பு ஆசிரியர் தன் வகுப்பில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் ஒரு சுவை மிக்க சாக்லேட் கொடுத்தார். ஒரு விசித்திரமான நிபந்தனையை விதித்தார். “குழந்தைகளே,  கவனியுங்கள்! உங்கள் கையில் இருக்கும் சாக்லேட்டை 10 நிமிடங்கள் சாப்பிடாமல் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.” இவ்வாறு கூறிவிட்டு வகுப்பறையை விட்டு வெளியேறினார்.    

வகுப்பு அறை முழுவதும் ஒரு கணம் அமைதி நிலவியது. எல்லா குழந்தைகளும் தங்கள் முன் இருக்கும் சாக்லேட்டை திகைப்போடு பார்க்கலாயினர்.   சாக்லேட்டை சாப்பிட வேண்டிய ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வந்தது; அவர்களால் அதைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை;  மிகவும் கஷ்டப்பட்டார்கள்.    


10 நிமிடங்கள் கழிந்ததும்,  ஆசிரியர் வகுப்பின் உள்ளே நுழைந்தார்.    இருக்கும் நிலைமையை ஆய்வு செய்தார்; ஒன்றைக் கண்டு பிடித்தார். ஒட்டு மொத்த வகுப்பில், 7 குழந்தைகள் மட்டுமே சாக்லேட்டை சாப்பிடாமல் அப்படியே வைத்து இருந்தார்கள் மற்ற குழந்தைகள் அனைவரும் சாக்லேட்டை சாப்பிட்டு முடித்த பின், அதன் நிறங்கள் பற்றியும், சுவை பற்றியும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

ஆசிரியர் தனது டைரியில் ரகசியமாக அந்த 7 குழந்தைகள் பெயர்களைக் குறித்துக் கொண்டார். பிறகு பாடம் நடத்த ஆரம்பித்தார்.   அந்த ஆசிரியரின் பெயர்,“வால்டர் மிச்சேல் (Walter Mishchel)”.   சில ஆண்டுகள் கழிந்தன; வால்டர் தனது டைரியைத் திறந்து 7 குழந்தைகள் பெயரையும் எடுத்துக் கொண்டார்; அவர்கள் தத்தம் துறையில் நல்லதொரு வெற்றியைப் பெற்றிருந்தார்கள்.  

அதே போல், அந்த வகுப்பின் மீதி மாணவர்கள்  பற்றியும் விசாரித்தார்; அதில் பெரும்பாலோர் ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள்; இன்னும் சிலர் மிகுந்த கஷ்டத்தில்  பொருளாதார,  சமூக சூழல்களில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தார்கள்.

வால்டரின் ஆராய்ச்சி, அவரை ஒரு வாக்கியத்துக்கு முடிவாக இட்டுச் சென்றது; அது என்னவெனில் – 
“வெறும் 10 நிமிடங்களுக்குக் கூட பொறுமையாக இருக்க முடியாத ஒரு மனிதனால், ஒரு போதும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியாது”.

இந்த ஆராய்ச்சி,  உலகளாவிய விதத்தில் பெரும் புகழைப் பெற்றது;  அதனை, “மார்ஷ் மால்லோவ் கோட்பாடு  (Marsh Mallow Theory) “  என்று அழைத்தார்கள்.    ஆசிரியர்  வால்டர், அந்தக் குழந்தைகளுக்கு கொடுத்த சாக்லேட்டின் பெயர் “மார்ஷ் மால்லோவ்”.

இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், எப்போதும் உலகத்தில் உள்ள பெரும்பாலான, வெற்றிகரமான சாதனையாளர் எல்லாம், உருவாக்கப்படுவது “பொறுமை” யின் மூலமே; அத்துடன் வேறு பல குணங்களும் சேர்ந்திடும். ஒரு மனிதனது சகிப்புத்தன்மையை பொறுமை அதிகரிக்கச் செய்து விடுவதால், எவ்வளவு கடுமையான சூழ்நிலைகளிலும்  அவர் துவண்டு போக மாட்டார்; தொடர்ந்து உத்வேகத்தில் இருப்பார்; ஒரு வெற்றிகரமான  மனிதராக ஆகிவிடுவார்.    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...

புரட்சிகர மேதின நல்வாழ்த்துகள்

மே தினம் ஒரு தீபாவளி போல் புத்தாண்டு போல் ஒரு நாள் விடுமுறை களிப்பில் கரைந்து போகும் நாளா மேதினம்  நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டி சிறப்பு திரைப்படம்  பட்டி மன்றம்  குத்துப்பாட்டு கும்மாளம் என டிவி முன் கடந்து போகும் வழக்கமான பண்டிகை போன்றதா மே தினம் டாஸ்மாக் பார்களில் நண்பர்களோடு மயங்கிக் களிக்கவா இந்த மே தினம் திங்கட்கிழமையில் வந்ததால் சனி ஞாயிறையும் சேர்த்து மூன்று நாள் சுற்றுலாத் திட்டத்தில் அடங்கிப் போகும்  எளிய கேளிக்கை தகுதியுடையதா அது சினிமா தியேட்டரிலும் ஷாப்பிங் மால்களிலும் கூடி மாலையில் KFC யில் கோழிக்கால் கடிக்கும் குதூகலத்திற்கு கிடைத்த வாய்ப்பா மே நாள் விடுமுறை  ஒரு புத்தாண்டைப் போல் பரஸ்பரம் Happy may day சொல்லி கடக்கவா இந்நாள் உழைக்கும் மக்கள் சிந்திய உதிரத்தில் உதித்த தினமல்லவா இந்த மே தினம் அதில் தோய்ந்து உலகெங்கும் பறக்கும் செங்கொடியில் அதன் ரத்தக் கவிச்சி இன்னுமல்லவா இருக்கிறது அது நமது சென்ற நூற்றாண்டு பாட்டன்கள் பாட்டிகள் உயிர் மாய்ந்து  சிக்காகோ நகர வீதிகளில் சிந்திய உதிரமல்லவா  8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உ...

மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!

*சுமார் ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!* நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, நீங்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி, சுருக்கமாக, நீங்கள் ஒரு மனிதராக இருந்தால்..., கீழே உள்ள [மகாபாரதத்திலி ருந்து எடுத்து தொகுத்த..., மதிப்பு மிக்க] "9 முத்தான கருத்துகளை" படித்து புரிந்து கொள்ளுங்கள்; வாழ்வில், கடைபிடியுங்கள்.!! 1. உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை நீங்கள் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகிவிடுவீர்கள்... *"கௌரவர்கள்"* 2. நீங்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால், உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்... *"கர்ணன்"* 3. உங்கள் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி மொத்த அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு அலட்சியம் செய்யாதீர்கள்... *"அஸ்வத்தாமா...