முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கையில் மேன்மை அடைவதற்கான சந்தர்ப்பம் :

ஒரு கிராமத்தில் ஒரு சிற்பி வாழ்ந்து வந்தார். அழகான சிற்பங்களைச் செய்வது அவர் வழக்கம். இந்த வேலையின் உதவியால் கிடைத்த வருமானத்தில், ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தார். சிறிது காலத்திற்கு பிறகு, அவரது மகனும் இதே சிற்ப வேலையை தன்னுடைய இளம் வயதிலேயே செய்யத் தொடங்கினான். அவனது சிற்பங்களும் மிக அழகாகவே இருந்தன. தன் மகனின் தொழில் திறமையைப் பார்த்துத் தந்தை மகிழ்ச்சி அடைந்தார். ஆனாலும் தந்தை, மகனின் ஒவ்வொரு சிற்பத்திலும் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டுவார். அவர் தன் மகனிடம், ‘நீ நன்றாக செய்கிறாய். அடுத்த முறை இந்த குற்றமும் வராமல் பார்த்துக் கொள்ள முயற்சி செய்’ என்று சொன்னார்.

தந்தையின் அறிவுரைக்கு மகன் எதுவும் மறுத்துச் சொல்ல மாட்டார். அப்பாவின் அறிவுரையை பின்பற்றி, தன் சிற்ப வேலையில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு இருந்தார். அதன் விளைவாக, மகனது சிற்பங்கள் தந்தையின் சிற்பங்களை விட மேன்மையுடையதாக ஆகியது . மக்கள் மகனின் சிற்பங்களை அதிக விலை கொடுத்து வாங்கும்படியான நேரமும் வந்து விட்டது. அதே நேரத்தில், தந்தையின் சிற்பங்கள் முன்பு இருந்த அதே விலையில்தான் தொடர்ந்து விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. 

தந்தை தொடர்ந்து தன் மகனின் சிற்பங்களில் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தார். ஆனால், இந்த செயல் இப்போது மகனுக்கு மகிழ்ச்சி தர வில்லை. எனவே வழக்கம் போல், அந்த தவறுகளை, மனதில் விருப்பம் இல்லாமல் ஏற்றுக் கொண்டான். ஆனால், தொடர்ந்து அப்பாவின் ஆலோசனைகளுக்கு ஏற்ப தன் சிற்பங்களில் அபிவிருத்தி செய்து கொண்டு இருந்தான். 

இறுதியாக மகனின் பொறுமை மிகவும் குறைந்த நிலைக்கு வந்தது. அவனது அப்பா குறைகளைச் சுட்டிக் காட்டும் போது, அவன் அப்பாவைப் பார்த்து ,”நீங்கள் ஒரு சிறந்த சிற்பியாக இருந்தும், உங்கள் சிற்பங்கள் குறைந்த விலைக்கே விற்கப்படுகின்றன. உங்களுடைய அறிவுரை, இனிமேல் எனக்குத் தேவை இல்லை. என்னுடைய சிற்பங்கள் குற்றம் இல்லாமல் மிக ஒழுங்காக இருக்கின்றன” என்றான்.    

மகன் இப்படிக் கூறியதைக் கேட்ட தந்தை அதன் பிறகு, அவனுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்தி விட்டார். சில மாதங்கள், மகன் மகிழ்ச்சியாக இருந்தான். அவனது சிற்பங்கள் முன்பு விரும்பப்பட்டதைப் போல, இப்போது இல்லை என்பது அவனுக்குத் தெரிந்தது. அது மட்டுமல்லாமல், சிற்பங்களின் விலையும் உயர்வது நின்று விட்டது. 

அவனால் முதலில் என்னவென்று புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, தன் அப்பாவிடம் சென்று உதவி செய்யுமாறு கேட்டான். தந்தை மிக அமைதியாக மகனைக் கவனித்தார். இப்படி ஒரு நாள் வரும் என்பதற்காக தயாராக இருந்தார். மகனுக்கும் இது புரிந்தது. அவன் அப்பாவிடம்,‘ இப்படி நடக்கப் போகிறது பற்றி, உங்களுக்கு எப்படித் தெரியும் ?’ என்றான். அதற்கு தந்தை, ‘ஆமாம். இதே சூழ்நிலையை, நானும் எதிர் நோக்கினேன்’ என்றார். மகன், ‘ஏன் அதை என்னிடம் கூறவில்லை ?’ என்றான்.    

தந்தை, ‘ ஏனென்றால், அதைப் புரிவதற்கு நீ விருப்பப்படவில்லை. உன்னைப் போல் நான் நல்ல சிற்பங்கள் செய்யவில்லை என்பது எனக்குத் தெரியும். சிற்பங்களைப் பற்றிய என் கருத்து தவறாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. என்னுடைய அறிவுரையால், உன்னுடைய சிற்பங்கள் மேன்மை அடைய வேண்டும் என்பதும் இப்போது இல்லை. ஆனால், நான் எப்போது உன் சிற்பங்களில் இருக்கும் குறைகளை, காண்பித்த போது, நீ செய்த செயலில் திருப்தி அடையாமல் இருந்தாய். அதன் பிறகு நீ அதில் அபிவிருத்தி செய்ய முயற்சி செய்தாய். அந்த முயற்சிதான் உன் சிற்பங்கள் மேலும் மேன்மை அடைவதற்கும், அதன் முடிவாக நீ வெற்றி அடைவதற்கும் காரணமாக இருந்தது. இதற்கு மேல் முன்னேற்றம் செய்வதற்கு வாய்ப்பு ஏதும் இல்லை என்று, உன்னுடைய வேலையில் நீ திருப்தி அடைந்து விட்ட அந்தக் கணமே உனது வளர்ச்சி நின்று போய் விட்டது. மக்கள் எப்போதும் உன்னிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். இதுதான் இப்போது உனக்கு போதுமான அளவு உன் வேலைக்கு புகழ் கிடைக்காததற்கும், உனக்கு போதுமான அளவு பணம் கிடைக்காததற்கும் காரணம் ஆகிறது’ என்றார்.   


மகன் சிறிது நேரம் அமைதியாக இருந்து கொண்டு, அதன் பிறகு அப்பாவிடம்,‘ அப்படியானால் நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?’ என்றான்.

மகனுடைய கேள்விக்கு பதிலாக, அப்பா அளவில் சிறியதாயினும் மதிப்பு மிக்க ஒரு பதிலைக் கொடுத்தார்.“ திருப்தி அடையாமல் இருப்பதற்குக் கற்றுக் கொள்; முன்னேறுவதற்கும், மேன்மை அடைவதற்குமான வாய்ப்பு எப்போதுமே இருக்கிறது என்பதை நீ நம்பு. இந்த ஒன்றுதான் எப்போதும் உன்னை ஊக்கப்படுத்தி, எதிர்காலத்தில் உன்னை முன்னேற்றம் அடையச் செய்யும். எப்போதும் உன்னை மேன்மை அடையச் செய்யும்” என்றார்.


எந்தவிதமான தவறும் செய்யாமல் இருப்பது சாத்தியம் என்கிற கருத்து, முழுமைத்துவம் பற்றிய ஒரு மாயை; அது ஒரு கட்டுக்கதை ஆகும். அடுத்தவர்களின் ஆலோசனைகள், விமர்சனங்கள் இவை இரண்டையும் சமமாக கவனிப்பதில்தான் உண்மையான செயல்திறன் இருக்கிறது. இந்த ஒன்றுதான் முன்னேற்றம் அடைவதற்கான ஒரே வழி ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...

புரட்சிகர மேதின நல்வாழ்த்துகள்

மே தினம் ஒரு தீபாவளி போல் புத்தாண்டு போல் ஒரு நாள் விடுமுறை களிப்பில் கரைந்து போகும் நாளா மேதினம்  நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டி சிறப்பு திரைப்படம்  பட்டி மன்றம்  குத்துப்பாட்டு கும்மாளம் என டிவி முன் கடந்து போகும் வழக்கமான பண்டிகை போன்றதா மே தினம் டாஸ்மாக் பார்களில் நண்பர்களோடு மயங்கிக் களிக்கவா இந்த மே தினம் திங்கட்கிழமையில் வந்ததால் சனி ஞாயிறையும் சேர்த்து மூன்று நாள் சுற்றுலாத் திட்டத்தில் அடங்கிப் போகும்  எளிய கேளிக்கை தகுதியுடையதா அது சினிமா தியேட்டரிலும் ஷாப்பிங் மால்களிலும் கூடி மாலையில் KFC யில் கோழிக்கால் கடிக்கும் குதூகலத்திற்கு கிடைத்த வாய்ப்பா மே நாள் விடுமுறை  ஒரு புத்தாண்டைப் போல் பரஸ்பரம் Happy may day சொல்லி கடக்கவா இந்நாள் உழைக்கும் மக்கள் சிந்திய உதிரத்தில் உதித்த தினமல்லவா இந்த மே தினம் அதில் தோய்ந்து உலகெங்கும் பறக்கும் செங்கொடியில் அதன் ரத்தக் கவிச்சி இன்னுமல்லவா இருக்கிறது அது நமது சென்ற நூற்றாண்டு பாட்டன்கள் பாட்டிகள் உயிர் மாய்ந்து  சிக்காகோ நகர வீதிகளில் சிந்திய உதிரமல்லவா  8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உ...

மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!

*சுமார் ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!* நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, நீங்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி, சுருக்கமாக, நீங்கள் ஒரு மனிதராக இருந்தால்..., கீழே உள்ள [மகாபாரதத்திலி ருந்து எடுத்து தொகுத்த..., மதிப்பு மிக்க] "9 முத்தான கருத்துகளை" படித்து புரிந்து கொள்ளுங்கள்; வாழ்வில், கடைபிடியுங்கள்.!! 1. உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை நீங்கள் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகிவிடுவீர்கள்... *"கௌரவர்கள்"* 2. நீங்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால், உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்... *"கர்ணன்"* 3. உங்கள் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி மொத்த அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு அலட்சியம் செய்யாதீர்கள்... *"அஸ்வத்தாமா...