முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

KNOW e-TAMIL

* 😀😀😀😀😀*

*“ஐயா வணக்கம்."*
*"வணக்கம். சொல்லுங்க."*

*"அடுத்த வாரம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம்; அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன், கிடைத்ததா?"*

*"அப்படியா எப்பொழுது அனுப்பினீர்கள்?"*

"நேற்றுதான் ஐயா *புலனம் (WhatsApp)* மூலம் அனுப்பினேன். இன்று காலை *பற்றியம் (Messenger)* மூலமும் பகிர்ந்தேன்."

"நான் புலனம் பயன்படுத்துவதை நிறுத்தி பலகாலம் ஆகிவிட்டது. இப்போது *தொலைவரி (Telegram)* தான் பயன்படுத்துகிறேன். இருப்பினும் நான் நேரில் வந்து பங்கேற்பது சிரமம். *இயங்கலை (Online)* மூலம் பங்கேற்கலாமா ?" 

"சரி ஐயா. *காயலை (skype)* மூலம் பேசுங்கள். நாங்கள் *ஒளிவீச்சி (Projector)* மூலம் பங்கேற்பாளர்களுக்குக் காண்பிக்கிறோம்."

"மிக்க நன்றி. வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். அதனால்தான் இந்த ஏற்பாடு. இல்லையெனில் *தடங்காட்டி (GPS)* உதவியுடன் நேரிலேயே வந்திருப்பேன்.   "

"பரவாயில்லை ஐயா. அழைப்பிதழை இன்னொரு முறை தொலைவரிக்கு அனுப்புகிறேன். தாங்கள் அதை உங்கள் *படவரி (Instagram)* மூலமும், *கீச்சகம் (Twitter)* மூலமும் பகிர்ந்தால், நன்றாக இருக்கும் ஐயா. நிகழ்ச்சிக்கும் ஒரு விளம்பரம் கிடைக்கும்."

"நிச்சயம் செய்கிறேன். அங்கே அரங்கில் *அருகலை (WiFi)* வசதி இருக்கிறதா?" 

"இல்லை ஐயா. எனது இன்னொரு *திறன்பேசி (smart phone)* மூலம் *பகிரலை (Hotspot)* உருவாக்கி, அதில் இணைப்பு ஏற்படுத்தி உங்கள் பேச்சை நேரலையில் பகிர்வோம் ஐயா. உங்கள் இல்லத்தில் *ஆலலை (Broadband)* இணைப்பு இருக்கிறதுதானே ஐயா?" 

"இருக்கிறது. ஆகவே சிரமம் இல்லை."

"உங்கள் பேச்சை அரங்கில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் காணும் விதமாக, *வலையொளி (youtube)* மூலமும், *முகநூல் (facebook)* மூலமும் நேரலை செய்கிறோம் ஐயா. மட்டுமல்லாமல், இதனை *வன்தட்டில் (Hard disk)* சேமித்து, பிறருக்கு பகிர்வோம். அவர்கள் பின்பு *முடக்கலை (Offline)* யிலும் கண்டு களிக்கலாம்."

*"மிக்க நன்றி"*

⭕ WeChat          -     அளாவி 
⭕Bluetooth       -     ஊடலை 
⭕ Thumbdrive   -    விரலி 
⭕ cctv                 -    மறைகாணி 
⭕ OCR                 -   எழுத்துணரி 
⭕ LED              - ஒளிர்விமுனை  
⭕ 3D                  -     முத்திரட்சி 
⭕ 2D                 -     இருதிரட்சி 
⭕ printer          -    அச்சுப்பொறி 
⭕ scanner         -    வருடி 
⭕ Simcard          -   செறிவட்டை 
⭕ Charger          -   மின்னூக்கி 
⭕ Digital             -   எண்மின் 
⭕ Cyber            -      மின்வெளி 
⭕ Router           -      திசைவி 
⭕ Selfie             -      தம் படம் - சுயஉரு - சுயப்பு
⭕ Thumbnail   -        சிறுபடம் 
⭕ Meme       - போன்மி 
⭕ Print Screen-திரைப்பிடிப்பு 
⭕ Inkjet        -மைவீச்சு 
⭕ Laser         - சீரொளி

  தமிழ் வாழ்க...🙏...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...

புரட்சிகர மேதின நல்வாழ்த்துகள்

மே தினம் ஒரு தீபாவளி போல் புத்தாண்டு போல் ஒரு நாள் விடுமுறை களிப்பில் கரைந்து போகும் நாளா மேதினம்  நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டி சிறப்பு திரைப்படம்  பட்டி மன்றம்  குத்துப்பாட்டு கும்மாளம் என டிவி முன் கடந்து போகும் வழக்கமான பண்டிகை போன்றதா மே தினம் டாஸ்மாக் பார்களில் நண்பர்களோடு மயங்கிக் களிக்கவா இந்த மே தினம் திங்கட்கிழமையில் வந்ததால் சனி ஞாயிறையும் சேர்த்து மூன்று நாள் சுற்றுலாத் திட்டத்தில் அடங்கிப் போகும்  எளிய கேளிக்கை தகுதியுடையதா அது சினிமா தியேட்டரிலும் ஷாப்பிங் மால்களிலும் கூடி மாலையில் KFC யில் கோழிக்கால் கடிக்கும் குதூகலத்திற்கு கிடைத்த வாய்ப்பா மே நாள் விடுமுறை  ஒரு புத்தாண்டைப் போல் பரஸ்பரம் Happy may day சொல்லி கடக்கவா இந்நாள் உழைக்கும் மக்கள் சிந்திய உதிரத்தில் உதித்த தினமல்லவா இந்த மே தினம் அதில் தோய்ந்து உலகெங்கும் பறக்கும் செங்கொடியில் அதன் ரத்தக் கவிச்சி இன்னுமல்லவா இருக்கிறது அது நமது சென்ற நூற்றாண்டு பாட்டன்கள் பாட்டிகள் உயிர் மாய்ந்து  சிக்காகோ நகர வீதிகளில் சிந்திய உதிரமல்லவா  8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உ...

மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!

*சுமார் ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!* நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, நீங்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி, சுருக்கமாக, நீங்கள் ஒரு மனிதராக இருந்தால்..., கீழே உள்ள [மகாபாரதத்திலி ருந்து எடுத்து தொகுத்த..., மதிப்பு மிக்க] "9 முத்தான கருத்துகளை" படித்து புரிந்து கொள்ளுங்கள்; வாழ்வில், கடைபிடியுங்கள்.!! 1. உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை நீங்கள் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகிவிடுவீர்கள்... *"கௌரவர்கள்"* 2. நீங்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால், உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்... *"கர்ணன்"* 3. உங்கள் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி மொத்த அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு அலட்சியம் செய்யாதீர்கள்... *"அஸ்வத்தாமா...