முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரத்தன் டாடா பிசினஸ் சாம்ராஜ்யம் கடந்து வந்த பாதை

குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் 1937ம் ஆண்டு நாவல் டாடா - சுனு தம்பதியினருக்கு பிறந்தவர் ரத்தன் டாடா.

தனது 10 வயதில் பெற்றோரை பிரிந்து பாட்டியின் வீட்டில் வளர்ந்தவர், மும்பையின் கேம்பியன் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். கதீட்ரல் மற்றும் ஜான் கோனன் பள்ளிகளில் தனது படிப்பை முடித்தார். தொடர்ந்து ஹார்வார்டு பல்கலைகழகத்தில் தனது நிர்வாக மேற்படிப்பை 1975ம் ஆண்டு படித்து முடித்தார். படித்து முடித்ததும் இவருக்கு IBMல் வேலை கிடைத்தது. ஆனால், அவருக்கு அமெரிக்காவில் பணிபுரிவதில் விருப்பம் இல்லை. இந்தியாவில் தான் பணியாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இருந்த ரத்தன் டாட்டா அதே ஆவலுடன் தாய்நாடு திரும்பினார்.

அதனையடுத்து தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். சொந்த நிறுவனத்தில் சேர்ந்துவிட்டோம் என உடனே அவர் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அடிப்படையான சிறிய பொறுப்புகளிலிருந்தே தன்னை வளர்த்துக்கொண்டவர். சிறிய பொறுப்புகளில் பணிபுரிந்து நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டதால், உழைப்பின் அருமையும், அதிலிருக்கும் கஷ்டத்தையும் அடிமட்டத்தில் அறிந்துகொண்டார். ஏறக்குறைய 30 வருடம் உழைத்தார். டாடா குழுமத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்தார். 1991ல் நிறுவனர் ஜே.ஆர்.டி டாடாவால், டாடா குழுமங்களின் தலைவராக நியமிக்கப்பட்டார் ரத்தன் டாடா. அன்றைக்குத் தொடங்கி இன்றைக்கு வரை, டாடா குழுமத்தின் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவரைக் கண்டு உலகமே வியக்கும் தலைவராக உருவெடுத்துள்ளார். டாடா நிறுவனத்தில் அவர் பொறுப்பேற்பதற்கு முன்புவரை, டாடா குழுமம் என்பது இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனம் மட்டுமே.
அதனை உலக அரங்கில் கொண்டு சென்றவர் ரத்தன் டாட்டா. உலக மார்கெட்டில் மிகப்பெரிய அடிகளை எடுத்து வைத்து டாடா குழுமம் உலகின் மூலை முடுக்கெங்கிலும் தனக்கான வாய்ப்புகளைத் தேடி அலைந்தவர். ஒவ்வொரு நாட்டின் சந்தையிலும் தனி முத்திரை பதித்தார். இரும்பு, மென்பொருள், கெமிக்கல், தேநீர், கார்கள் என அனைத்து துறையிலும் தடம் பதித்தார். இந்தியாவிலேயே ஆண்டுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய மென்பொருள் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது டாடா குழுமத்தைச் சார்ந்த டிசிஎஸ். கார்களை தயாரிப்பதில் ஆர்வம் அதிகரிக்க, 2008ல் லேன்ட்ரோவர், ஜாக்குவார் நிறுவனங்களின் இந்திய உரிமையை வாங்கினார்.அதே நேரத்தில் வெளிநாட்டில் இந்திய கார்களுக்கு டிமாண்டை உருவாக்கியவரும் இவரே என்றால் அது மிகையில்லை. உலகின் மிகப்பெரிய இரும்பு நிறுவனமான கோரஸ்-ஐ வாங்கி, இரும்பு உற்பத்தியில் உலக அளவில் முண்ணனியில் கொண்டு வந்தார்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பு வகித்ததால் இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருதும், பத்ம விபூஷன் விருதும் வழங்கி கௌரவித்தது. சாமானியனும் காரில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றி அழகு பார்த்தவர் . அதன் எதிரொலியாக உதித்தது தான் டாடா நானோ திட்டம். வெறும் 1 லட்ச ரூபாயில் கார்களை வெளியிட முன்வந்தது டாடா. ஆனால், அவரின் இந்த முயற்சியை பார்த்து உலகமே சிரித்தது. 1லட்சத்தில் காரா? குறைந்த தரத்துடன், சிறிய விபத்தில் அப்பளமாக நொறுக்கும் வகையில்தான் இருக்கப்போகிறது என பலரும் கேலி பேசினர். அவர்களின் வார்த்தைகளை பொய்யாக்கி இந்திய சாலைகளில் நானோ கார்கள் ஓடத் தொடங்கின. அவர் அறிவித்ததை காட்டிலும் சற்றே விலை அதிகம் தான். நானோ காரின் விலை 1.25 லட்சம். சற்று கூடுதலாக இருந்தாலும், உலகின் மிகவும் குறைந்த விலை கார் என்ற பெருமையுடன், நல்ல தரத்துடன் வெற்றிகரமான மாடலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. பிசினசில் வெற்றிப் பெறுபவர்கள் பெரும்பாலும் பணத்தின் பின் ஓடுபவர்களாகவே இருக்கின்றனர்.

ரத்தன் டாடா பலருக்கும் முன்மாதிரியாய் தொழிலில் பல துறைகளில் சிறக்க நினைத்தாலும் பணம் ஈட்டுவதை முதன்மையாகக் கொண்டு இவற்றை செய்யாததே அவரின் தனிச்சிறப்பு. அதேபோல், டாடா ட்ரஸ்ட் மூலமாக ரத்தன் டாடா முன்னெடுத்துள்ள தொண்டு பணிகள் மற்றும் நன்கொடைகள் சொல்லில் அடங்காதவை. கொரோனாவால் உலகமே திணறிக்கொண்டிருந்த நிலையில், அதை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளுக்காக ரத்தன் டாடா 500 கோடி நிதி ஒதுக்கினார். மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், நோயாளிகளின் சிகிச்சைக்காக சுவாசிக்க உதவும் உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள் என பார்த்து பார்த்து நிதியுதவி வழங்கினார்.

தமிழகத்துக்கும் டாடா குழுமம், கொரோனா கண்டறிவதற்காக சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் 40 ஆயிரத்து 32 பிசிஆர் கிட் கருவிகளை வழங்கியுள்ளது. உலகத்தையே தன்னை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்தவர் இன்று வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒருமுறை ரத்தன் டாடாவிடம், 'நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை?' எனக் கேட்டதற்கு, சிரிப்புடன் இப்படிக்கூறினார், "4 முறை கல்யாணம் செய்யும் நிலைக்குச் சென்று, கடைசியில் அது நிறைவேறாமல் போனது. எனக்கு 4 காதல் தோல்விகள் உள்ளன" என்றார். உலகச் சந்தையில் இந்தியாவிற்கு ஓர் அந்தஸ்த்தை ஏற்படுத்திக் கொடுத்ததில் பெரும்பங்கு ரத்தன் டாடாவிற்கு உரியது எனக் கூறினால் மிகையில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...

புரட்சிகர மேதின நல்வாழ்த்துகள்

மே தினம் ஒரு தீபாவளி போல் புத்தாண்டு போல் ஒரு நாள் விடுமுறை களிப்பில் கரைந்து போகும் நாளா மேதினம்  நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டி சிறப்பு திரைப்படம்  பட்டி மன்றம்  குத்துப்பாட்டு கும்மாளம் என டிவி முன் கடந்து போகும் வழக்கமான பண்டிகை போன்றதா மே தினம் டாஸ்மாக் பார்களில் நண்பர்களோடு மயங்கிக் களிக்கவா இந்த மே தினம் திங்கட்கிழமையில் வந்ததால் சனி ஞாயிறையும் சேர்த்து மூன்று நாள் சுற்றுலாத் திட்டத்தில் அடங்கிப் போகும்  எளிய கேளிக்கை தகுதியுடையதா அது சினிமா தியேட்டரிலும் ஷாப்பிங் மால்களிலும் கூடி மாலையில் KFC யில் கோழிக்கால் கடிக்கும் குதூகலத்திற்கு கிடைத்த வாய்ப்பா மே நாள் விடுமுறை  ஒரு புத்தாண்டைப் போல் பரஸ்பரம் Happy may day சொல்லி கடக்கவா இந்நாள் உழைக்கும் மக்கள் சிந்திய உதிரத்தில் உதித்த தினமல்லவா இந்த மே தினம் அதில் தோய்ந்து உலகெங்கும் பறக்கும் செங்கொடியில் அதன் ரத்தக் கவிச்சி இன்னுமல்லவா இருக்கிறது அது நமது சென்ற நூற்றாண்டு பாட்டன்கள் பாட்டிகள் உயிர் மாய்ந்து  சிக்காகோ நகர வீதிகளில் சிந்திய உதிரமல்லவா  8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உ...

மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!

*சுமார் ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!* நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, நீங்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி, சுருக்கமாக, நீங்கள் ஒரு மனிதராக இருந்தால்..., கீழே உள்ள [மகாபாரதத்திலி ருந்து எடுத்து தொகுத்த..., மதிப்பு மிக்க] "9 முத்தான கருத்துகளை" படித்து புரிந்து கொள்ளுங்கள்; வாழ்வில், கடைபிடியுங்கள்.!! 1. உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை நீங்கள் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகிவிடுவீர்கள்... *"கௌரவர்கள்"* 2. நீங்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால், உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்... *"கர்ணன்"* 3. உங்கள் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி மொத்த அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு அலட்சியம் செய்யாதீர்கள்... *"அஸ்வத்தாமா...