முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிகமுக்கியமான படிப்புகள்..!

தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப, நாமும் நம்மை அப்டேட் செய்து கொள்வது நல்லது. அப்போதுதான், முன்னேறி வரும் தொழில்நுட்ப உலகில் நமக்கான அங்கீகாரத்தை பெற முடியும். உதாரணத்திற்கு... 20 ஆண்டுகளுக்கு முன்பு, பணம் கொட்டும் ஐ டி துறை படிப்பாக இருந்த சி மற்றும் சி++ மென்பொருள் திறன்கள் இன்று, அடிப்படை படிப்புகளாக மாறிவிட்டன. அதேசமயம் 20 வருடங்களுக்கு முன்பு, ஐ டி துறையே அறிந்திராத ஏ ஐ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்று ஐ டி துறையையும், ஒட்டுமொத்த தகவல் உலகையுமே ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்த முன்னேற்றம், சிலரது வேலைகளை பறித்துவிடுகிறது. பலருக்கும் புதுமையான வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கிறது. இத்தகைய போட்டி உலகில், உங்களை நிலைநிறுத்த எதிர்கால சிந்தனை அவசியம். குறிப்பாக, எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கும் தொழில்நுட்பங்களை கற்றறிந்து, அது சார்ந்த துறையில் முன்னேற வேண்டும். அப்போதுதான், வளமான எதிர்காலம் அமையும். அப்படி, எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கும் சில துறைகளை பற்றியும், அதில் இருக்கும் படிப்புகளை பற்றியும் அறிந்து கொள்வோம்.

ஏ ஐ செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ ஐ (AI) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பல்வேறு ஆச்சரியத்தக்க மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. ஆண்ட்ராய்டு ஆப்ஸ் வடிவமைப்பில் தொடங்கி, உற்பத்தி தொழிற்சாலைகள், டிசைனிங் துறை, சினிமா துறை, தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் லைவ் வரை... எல்லா வேலைகளையும் எளிதாக்க, மனிதர்களை விட சிறப்பாக செய்து முடிக்க... ஏ ஐ தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. பல்வேறு பணிகளுக்கும் ஏ ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதால், பலரும் பணி பாதுகாப்பின்றி வெளியேற்றப்படும் சூழல் நிலவுகிறது.

இத்தகைய சூழலில் செயற்கை நுண்ணறிவு ஏ ஐ தொடர்பான கல்வி, வேலையை காப்பாற்றுவதோடு, வருமானத்தை பல மடங்கு பெருக்கவும் உதவி புரிகிறது. வழக்கமான பி டெக், எம் டெக், படிப்புகள் தவிர, செயற்கை நுண்ணறிவு குறித்து கற்பிக்கப்படும் படிப்புகளை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்த வழியாகும். அதாவது, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் ஆகியவற்றுடன் கூடிய பி டெக், மற்றும் எம் டெக், படிப்புகள் மிகவும் சிறந்தது. இதையும் தாண்டி, தற்போது வேலையில் இருப்பவர்கள் செயற்கை நுண்ணறிவு குறித்து படிக்க விரும்பினால், தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் 5 செயற்கை நுண்ணறிவு சான்றிதழ் படிப்புகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துப் படிக்கலாம்.

1. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றலின் அடித்தளம் (Foundation of Artificial Intelligence and Machine Learning)
2. இயந்திர கற்றல் மற்றும் AI-ல் முதுகலை பட்டயம் (PG Program in Machine Learning and AI)
3. செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆழமான கற்றலில் முதுகலை பட்டயம் (Post Graduate Certificate Program in Artificial Intelligence and Deep Learning)
4. முழு அடுக்கு இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டம் (Full Stack Machine Learning and Artificial Intelligence Program)
5. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலில் முதுகலை பட்டயம் (Post Graduate Program in Artificial Intelligence and Machine Learning) தற்போதைய சூழலில் டிஜிட்டல் மார்க்கெட்டிங், டேட்டா சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகள் இருப்பதால், அதனுடன் செயற்கை நுண்ணறிவு படிப்பையும் படித்துக்கொண்டால், கண்டிப்பாக சம்பளம் பல மடங்கு உயருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

விண்வெளி அறிவியல்

ஏ ஐ தொழில்நுட்பம் போன்றே விண்வெளி அறிவியலும் எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்த இருக்கும் படிப்பாகும். ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் விண்வெளி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. விண்வெளி ஆராய்ச்சி நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்தல் ஆகியவற்றுக்கும் பயன்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சித்துறை மூலம் செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு, வானவெளியில் நிலை நிறுத்தப்பட்டு பல்வேறு ஆராய்ச்சிகளும், ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இத்துறையில் நல்ல வேலை வாய்ப்புகளும் காத்திருக்கின்றன.

அதனால் அது சம்பந்தமான படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்து படித்தால் நல்ல எதிர்காலம் உள்ளது. மத்திய அரசின் விண்வெளித்துறையின் கீழ் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டு பல்வேறு பாடப் பிரிவுகள் நடத்தப்படுகின்றன. விண்வெளித்துறை தொடர்பான படிப்புகளை மாணவர்கள் படிக்கலாம். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் நடத்தப்படும் பாட பிரிவுகள்...

இளநிலை:

பி டெக் ஆவியானிக்ஸ்,
பி டெக் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் இரு பட்டங்கள்:
பி.டெக் படிப்புடன் (மாஸ்டர் ஆப் சயின்ஸ்/மாஸ்டர் ஆப் டெக்னாலஜி)

முதுகலை:

எம் டெக் ஏரோடைனமிக்ஸ் அண்ட் பிளைட் மெக்கானிக்ஸ்,
எம் டெக் ஸ்ட்ரக்சர் அண்ட் டிசைன்,
எம்.டெக் தெர்மல் அண்ட் புரோபெல்ஷன்,
எம் டெக் கண்ட்ரோல் சிஸ்டம்,
எம் டெக் டிஜிட்டல் சிக்னல் புராசசிங்,
எம் டெக் மைக்ரோவேவ் என்ஜினீயரிங்,
எம் டெக் பவர் எலெக்ட்ரானிக்ஸ்,
எம் டெக் எர்த் சிஸ்டம் சயின்ஸ்,
எம் டெக் ஜியோ இன்பர்மேட்டிக்ஸ்,
எம் டெக் மெஷின் லேர்னிங் அண்ட் கம்யூட்டிங்...
இப்படி விண்வெளி தொடர்பான படிப்புகள் நிறைய இருக்கின்றன. இவற்றை படிப்பதன் மூலம் வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...

புரட்சிகர மேதின நல்வாழ்த்துகள்

மே தினம் ஒரு தீபாவளி போல் புத்தாண்டு போல் ஒரு நாள் விடுமுறை களிப்பில் கரைந்து போகும் நாளா மேதினம்  நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டி சிறப்பு திரைப்படம்  பட்டி மன்றம்  குத்துப்பாட்டு கும்மாளம் என டிவி முன் கடந்து போகும் வழக்கமான பண்டிகை போன்றதா மே தினம் டாஸ்மாக் பார்களில் நண்பர்களோடு மயங்கிக் களிக்கவா இந்த மே தினம் திங்கட்கிழமையில் வந்ததால் சனி ஞாயிறையும் சேர்த்து மூன்று நாள் சுற்றுலாத் திட்டத்தில் அடங்கிப் போகும்  எளிய கேளிக்கை தகுதியுடையதா அது சினிமா தியேட்டரிலும் ஷாப்பிங் மால்களிலும் கூடி மாலையில் KFC யில் கோழிக்கால் கடிக்கும் குதூகலத்திற்கு கிடைத்த வாய்ப்பா மே நாள் விடுமுறை  ஒரு புத்தாண்டைப் போல் பரஸ்பரம் Happy may day சொல்லி கடக்கவா இந்நாள் உழைக்கும் மக்கள் சிந்திய உதிரத்தில் உதித்த தினமல்லவா இந்த மே தினம் அதில் தோய்ந்து உலகெங்கும் பறக்கும் செங்கொடியில் அதன் ரத்தக் கவிச்சி இன்னுமல்லவா இருக்கிறது அது நமது சென்ற நூற்றாண்டு பாட்டன்கள் பாட்டிகள் உயிர் மாய்ந்து  சிக்காகோ நகர வீதிகளில் சிந்திய உதிரமல்லவா  8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உ...

இனிய பராபவ தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

கடந்த  வருடங்களில்  அனைத்திலும்  நடந்த  யாவையும் மறந்து 💜🔥 நேற்று  வரை  மனக்கசப்பு , கஷ்டம் , கவலை யாவும்  பூத்து  உதிர்ந்த  மலராய் 💜🔥 இன்று  தொடங்கும் புது  வருடத்தில்  புதிதாய்  பிறந்த  மழலையாய்  புன்னகையுடன் 💜🔥 சுட்டெரிக்கும்  சூரியனையும்  சக்கரை பொங்கலிட்டு 💜🔥 பலவிதமான  மனிதரை  பலவிதமான  எண்ணங்களை  பலவிதமான உணர்வுகளை  சிரித்தே கடந்து 💜🔥 பலவிதமான கனிகளை  இறைவனுக்கு படைத்து 💜🔥 நீண்ட  ஆயுளும்  நிறை செல்வமுமாய்  மனநிம்மதியுடன் 💜🔥 சித்திர குப்தனை வணங்கி  தித்திக்கும் சித்திரையை  சிறப்புடனே வரவேற்போம் 💜🔥 அனைவருக்கும் #சித்திரை  திருநாள் நல்வாழ்த்துகள் 💜🔥