முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெற்றிலை மாலை சாற்றினால்

 எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.....



வெற்றிலையின் மகிமை :

வெற்றிலை என்பது இந்துக்களின் வழிபாட்டு முறையில் மிக முக்கியமான மங்கள பொருளாகும். சுப நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, அசுப நிகழ்ச்சிகளிலும் கூட வெற்றிலை, பாக்கு சேர்ந்த தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் உள்ளது. கோவில்களில் சுவாமிக்கு அத்தனை நைவேத்தியங்கள், பழங்கள் படைத்தாலும், கடைசியாக வெற்றிலை தாம்பூலம் சமர்பித்த பிறகு தான் தீபாராதனை காட்டுவார்கள். தடபுடலாக விருந்திற்கு பிறகு வெற்றிலை பாக்கு போட்டால் மனம் மகிழ்ச்சி அடையும் என்பது ஐதீகம். அதனால் சுவாமியின் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக கடைசியாக தாம்பூலம் சமர்பிக்கும் வழக்கம் உள்ளது. தாம்பூலம் மங்களத்தின் அடையாளமாகும். வெற்றிலை என்பது மகாலட்சுமியின் சொரூபம். இது வெற்றியை தரக் கூடிய பொருளாகும்.

எந்த தெய்வத்திற்கு வெற்றிலை மாலை ஏற்றது?

எந்த தெய்வத்திற்கு வெற்றிலை மாலை ஏற்றது?
கோவில்களில் சுவாமிக்கு வெற்றிலை மாலை சாற்றுவதை பார்த்திக்கிறோம். பலரும் பரிகாரமாக வெற்றிலை மாலை சாற்றுவது உண்டு. ஆனால் முதலில் எந்தெந்த கடவுள்களுக்கு வெற்றிலை மாலை சாற்ற வேண்டும், எந்த முறையில் வெற்றிலை மாலையை, எந்த கிழமையில் சாற்றினால் என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்பதை தெரிந்து கொண்டு, வெற்றிலை மாலை சாற்றினால் அதன் முழு பலனும் கிடைக்கும். முழு முதற் கடவுளான விநாயகருக்கு வெற்றிலை மாலை சாற்றலாம். அதற்கு பிறகு அனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றலாம். வேறு எந்த தெய்வத்திற்கும் வெற்றிலை மாலை சாற்றக் கூடாது. மாறாக வெற்றிலை-பாக்கு தாம்பூலமாக படைத்து வழிபடலாம்.

வெற்றிலை மாலை கட்டும் முறை :

வெற்றிலை மாலை கட்டும் முறை :
வெற்றிலை மாலை கட்டும் போது ஒற்றை படை எண்ணிக்கையிலேயே கட்ட வேண்டும். முதலில் இரண்டு வெற்றிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் காம்பு பகுதியை கிள்ளி விட்டு, வெற்றிலையின் நடுவில் பாக்கு வைத்து கட்ட வேண்டும். கொட்டை பாக்கு, சுருள் பாக்காக இருந்தால் இரண்டு என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். அது கிடைக்கவில்லை என்றால் பாக்கு தூள் அல்லது சீவல் சிறிதளவு வைத்து மடித்து, அவற்றை மாலையாக தொடுக்க வேண்டும். வெறும் வெற்றிலையாகவோ அல்லது ஒரு வெற்றிலையை வைத்தோ மாலை கட்டி போடக் கூடாது.

எந்தெந்த பிரச்சனை தீர வெற்றிலை மாலை மாற்றலாம் ?

எந்தெந்த பிரச்சனை தீர வெற்றிலை மாலை மாற்றலாம் ?
* வீட்டில் குழந்தைகள் சரியாக படிக்கவில்லை. படிப்பில் தடுமாற்றம் உள்ளது. ஞாபக மறதி அதிகமாக உள்ளது. படிப்பதை மறந்து விடுகிறான். படிப்பில் கவனம் இருப்பது கிடையாது என சொல்பவர்கள் 9 என்ற எண்ணிக்கையில் வெற்றிலை கட்டுகள் வைத்து மாலை கட்டி விநாயகர் அல்லது அனுமானுக்கு சாற்ற வேண்டும்.

* மகன் எந்த வேலையிலும் நிரந்தரமாக இருப்பதில்லை, குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள், சண்டைகள், கோவிலுக்கு செல்ல முடியவில்லை, பூஜை செய்ய முடியவில்லை, மனதில் சஞ்சலமாக உள்ளது என்றால் 11 வெற்றிலையை மாலையாக கட்டி சுவாமிக்கு சாற்ற வேண்டும்.

* வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும், பணக்கஷ்டம் தீர வேண்டும், திருமண தடைகள் விலக வேண்டும், வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெற வேண்டும் என்றால் 21 வெற்றிலைகளை, பாக்குடன் சேர்த்து மாலையாக கட்டி ஆஞ்சநேயருக்கு அணிவிக்க வேண்டும். இதை ஆஞ்சநேயர் மற்றும் குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமை அல்லது சனிக்கிழமையில் சாற்றுவது மிகவும் விசேஷமானதாகும்.

அனைத்து பிரச்சனைகளும் தீர வழிபாடு :

அனைத்து பிரச்சனைகளும் தீர வழிபாடு :
பணக் கஷ்டம், கடன், நோய், திருமணம் தடை, படிப்பில் தடை என அனைத்து பிரச்சனைகளும் வீட்டில் உள்ளது, வீட்டில் நிம்மதியே இல்லை. என்ன செய்தால் இந்த ஒட்டுமொத்த பிரச்சனையும் தீரும் என்பவர்கள் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு 108 வெற்றிலை கொண்ட மாலை சாற்றி, தயிர் சாதம் நைவேத்தியமாக படைக்க வேண்டும். என்ன பிரச்சனையாக இருந்தாலும் அது தீர வேண்டும் என்றால் வெற்றிலை மாலை சாற்றி விட்டு 21 நாட்கள், ஆஞ்சநேயரை 11 முறை வலம் வர வேண்டும்.தொடர்ந்து 21 நாட்களோ அல்லது 21 சனிக்கிழமைகளோ 108 வெற்றிலை மாலைகளை சாற்றி விட்டு, அனுமனை 11 முறை வலம் வந்து வழிபடுங்கள். குடும்பத்துடன் சென்று வழிபடுவது சிறப்பானதாகும். சுவாமியிடம் எந்த பிரச்சனையையும் சொல்லி முறையிடாமல், 11 முறை வலம் வரும் போதும் ராம், ராம் என்ற மந்திரத்தை ஆஞ்சநேயரை மனதில் நினைத்து சொல்லியபடியே வலம் வர வேண்டும். இப்படி செய்தால் இந்த வேண்டுதல் முடிப்பதற்குள் உங்களின் பிரச்சனைகளை ஆஞ்சநேயர் தீர்த்து வைப்பார்.✍🏼🌹

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...

புரட்சிகர மேதின நல்வாழ்த்துகள்

மே தினம் ஒரு தீபாவளி போல் புத்தாண்டு போல் ஒரு நாள் விடுமுறை களிப்பில் கரைந்து போகும் நாளா மேதினம்  நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டி சிறப்பு திரைப்படம்  பட்டி மன்றம்  குத்துப்பாட்டு கும்மாளம் என டிவி முன் கடந்து போகும் வழக்கமான பண்டிகை போன்றதா மே தினம் டாஸ்மாக் பார்களில் நண்பர்களோடு மயங்கிக் களிக்கவா இந்த மே தினம் திங்கட்கிழமையில் வந்ததால் சனி ஞாயிறையும் சேர்த்து மூன்று நாள் சுற்றுலாத் திட்டத்தில் அடங்கிப் போகும்  எளிய கேளிக்கை தகுதியுடையதா அது சினிமா தியேட்டரிலும் ஷாப்பிங் மால்களிலும் கூடி மாலையில் KFC யில் கோழிக்கால் கடிக்கும் குதூகலத்திற்கு கிடைத்த வாய்ப்பா மே நாள் விடுமுறை  ஒரு புத்தாண்டைப் போல் பரஸ்பரம் Happy may day சொல்லி கடக்கவா இந்நாள் உழைக்கும் மக்கள் சிந்திய உதிரத்தில் உதித்த தினமல்லவா இந்த மே தினம் அதில் தோய்ந்து உலகெங்கும் பறக்கும் செங்கொடியில் அதன் ரத்தக் கவிச்சி இன்னுமல்லவா இருக்கிறது அது நமது சென்ற நூற்றாண்டு பாட்டன்கள் பாட்டிகள் உயிர் மாய்ந்து  சிக்காகோ நகர வீதிகளில் சிந்திய உதிரமல்லவா  8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உ...

மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!

*சுமார் ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!* நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, நீங்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி, சுருக்கமாக, நீங்கள் ஒரு மனிதராக இருந்தால்..., கீழே உள்ள [மகாபாரதத்திலி ருந்து எடுத்து தொகுத்த..., மதிப்பு மிக்க] "9 முத்தான கருத்துகளை" படித்து புரிந்து கொள்ளுங்கள்; வாழ்வில், கடைபிடியுங்கள்.!! 1. உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை நீங்கள் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகிவிடுவீர்கள்... *"கௌரவர்கள்"* 2. நீங்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால், உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்... *"கர்ணன்"* 3. உங்கள் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி மொத்த அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு அலட்சியம் செய்யாதீர்கள்... *"அஸ்வத்தாமா...