முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனம் குவித்து செய்கின்ற வேலை மிகச் சிறந்த முடிவுக்குக் கொண்டு செல்கிறது

 இங்கிலாந்து நாட்டின் வரலாற்றில் ஆல்பர்ட் ஒரு புகழ் பெற்ற அரசராக இருந்தார். அவர் தன் நாட்டு மக்களின் நன்மைக்காக, மிகச் சிறந்த நலத் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். இதனால் அவர் “மகா ஆல்பர்ட் *(Alfred the Great )”* என்றும் அழைக்கப்பட்டார்.

  ஆரம்ப காலத்தில், சாதாரணமான எல்லா அரசர்களையும் போல, ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை மேற்கொண்டார். குருட்டுத் தனமான மனப்போக்குடன், அது நல்லதா அல்லது கெட்டதா என ஆராய்ந்து பார்க்காமல், தன் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, அதன் படியே, நடக்கலானார். அவரது வாழ்க்கை சாப்பிடுவதிலும், குடிப்பதிலும், மேலும் களியாட்டங்களில் ஈடுபடுவதிலும் மூழ்கித் திளைத்தது.

  சமுத்திரத்தில் விழுந்த ஒரு வைக்கோல் குச்சி மேலே எழும்பியும், கீழே விழுந்தும் அலைகளால் அடித்துச் செல்லப்படுவதைப் போல, கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கையை மேற்கொண்டார். இறுதியில் அது அவரை ஒழுங்கற்ற நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றது. பொறுப்பில்லாத இவரது வாழ்க்கை எதிரிகளுக்கு பயன் தருவதாக அமைந்தது. பகைவர்களால் இவரது ராஜ்ஜியம் கைப்பற்றப் பட்டு, இவர் அரச பதவியை இழந்தார்.  

  இங்கும் அங்குமாக அலைந்து கொண்டு போராடிக் கொண்டு இருந்தார். ஒரு விவசாயி வீட்டில் வேலை செய்தார். பாத்திரங்கள் கழுவுவது, தண்ணீர் நிரப்புவது, சமையல் அறையில் உள்ள இதர வேலைகளைச் செய்வது – இவை அனைத்தும் ஆல்பர்ட்டுக்கு கொடுக்கப்பட்டன. அந்த விவசாயின் மனைவி இவர் செய்யும் வேலையை கண்காணிப்பாள். ஆல்பர்ட் தலைமறைவாகவே தன் வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டி இருந்தது.

  ஒரு நாள், அந்த விவசாயின் மனைவி சில முக்கியமான வேலை நிமித்தம் வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அடுப்பில் கறிக் குழம்பு கொதித்துக் கொண்டு இருந்தது. நான் திரும்பி வரும் வரை அதைக் கொஞ்சம் கவனித்துக் கொள் என்று ஆல்பர்ட்டிடம் கேட்டுக் கொண்டார்.

  அவள், தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டு திரும்பும் போது, ஆல்பர்ட் சோம்பேறித்தனமாக உட்கார்ந்து கொண்டு, பகல் கனவு கண்டு கொண்டு இருந்தார். அடுப்பில் இருந்த கறிக் குழம்பு முழுவதும் புகைந்து போய் விட்டது.

  “ முட்டாள் தனமான வாலிபனே! நீயும் ஆல்பர்ட் போலவே இருக்கிறாயே ! உனக்குக் கொடுக்கப் பட்ட எந்த வேலையையும் நீ முழுக் கவனத்துடன் செய்து முடிப்பது இல்லை. நீயும் அவரைப் போல அலைந்து திரிந்து போராட வேண்டியதுதான் “ என்று அந்தப் பெண் கூறினாள்.  

  ஐயோ, பாவம் அந்தப் பெண்மணி! அரசன் ஆல்பர்ட்டுடனேதான் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்பது அவளுக்குத் தெரியாது. ஆனால், ஆல்பர்ட் தன்னுடைய தவறை உணர்ந்தார். இப்போது அவர் ஒரு முடிவுக்கு வந்தார். -- “இனிமேல் எந்த வேலையைச் செய்தாலும் முழுமையான கவனத்துடன் மனதை ஈடுபடுத்தி செய்வேன். கற்பனைக் கோட்டைகளை கட்டிக் கொண்டு இருப்பதில் எந்த பயனும் இல்லை !”

  ஆல்பர்ட் திரும்பவும் தன் நாட்டை சுற்றியுள்ள நேச நாடுகளை ஒன்று சேர்த்தார். பொருள் திரட்டினார். தன்னுடைய படையை ஒன்று திரட்டி பகைவனைத் தாக்கி, லண்டன் மாநகரை திரும்பவும் கைப் பற்றினார். இந்த சமயத்தில் அவர் இங்கிலாந்து முழுவதையும் ஒரு குடையின் கீழ், அதாவது தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். தன்னுள் மீண்டும் எழுந்த ஒரு புதிய உற்சாகத்துடன் வேலை செய்தார். முழு கவனத்தோடும், புரிதலோடும் நாட்டை முன்னேற்றத்தை நோக்கிக் கொண்டு சென்றார்.  

  ஒரு நாள் அரசர் ஆல்பர்ட் அந்த விவசாயியின் வீட்டுக்குத் திரும்பவும் சென்றார். விவசாயியின் மனைவிக்கு அதிக அளவில் பொருளுதவி செய்தார். “மரியாதைக்குரிய எஜமானியே, நீங்கள் அன்று எனக்குப் பாடம் கற்பிக்காவிட்டால், நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது.” தனக்குக் கிடைக்கப் பெற்ற நல்ல அறிவுரையை மரியாதையோடு ஏற்றுக் கொள்ளும் நல்ல குண நலனும், அந்த அறிவுரை தன்னை விட கீழானவர்களிடம் இருந்து வந்த போதிலும், அதனை ஏற்றுக் கொண்டதும், இப்போதும் புகழப்படக் கூடிய ஒன்றாகும்.    

 அந்த நாளில் அவர் யார் என்று தெரியாமல், அந்த மாதிரியான கடுமையான வார்த்தைகளால் பேசி விட்டோமே என்று அந்தப் பெண்மணி அதிர்ச்சி அடைந்தாள்.  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...

புரட்சிகர மேதின நல்வாழ்த்துகள்

மே தினம் ஒரு தீபாவளி போல் புத்தாண்டு போல் ஒரு நாள் விடுமுறை களிப்பில் கரைந்து போகும் நாளா மேதினம்  நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டி சிறப்பு திரைப்படம்  பட்டி மன்றம்  குத்துப்பாட்டு கும்மாளம் என டிவி முன் கடந்து போகும் வழக்கமான பண்டிகை போன்றதா மே தினம் டாஸ்மாக் பார்களில் நண்பர்களோடு மயங்கிக் களிக்கவா இந்த மே தினம் திங்கட்கிழமையில் வந்ததால் சனி ஞாயிறையும் சேர்த்து மூன்று நாள் சுற்றுலாத் திட்டத்தில் அடங்கிப் போகும்  எளிய கேளிக்கை தகுதியுடையதா அது சினிமா தியேட்டரிலும் ஷாப்பிங் மால்களிலும் கூடி மாலையில் KFC யில் கோழிக்கால் கடிக்கும் குதூகலத்திற்கு கிடைத்த வாய்ப்பா மே நாள் விடுமுறை  ஒரு புத்தாண்டைப் போல் பரஸ்பரம் Happy may day சொல்லி கடக்கவா இந்நாள் உழைக்கும் மக்கள் சிந்திய உதிரத்தில் உதித்த தினமல்லவா இந்த மே தினம் அதில் தோய்ந்து உலகெங்கும் பறக்கும் செங்கொடியில் அதன் ரத்தக் கவிச்சி இன்னுமல்லவா இருக்கிறது அது நமது சென்ற நூற்றாண்டு பாட்டன்கள் பாட்டிகள் உயிர் மாய்ந்து  சிக்காகோ நகர வீதிகளில் சிந்திய உதிரமல்லவா  8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உ...

மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!

*சுமார் ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!* நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, நீங்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி, சுருக்கமாக, நீங்கள் ஒரு மனிதராக இருந்தால்..., கீழே உள்ள [மகாபாரதத்திலி ருந்து எடுத்து தொகுத்த..., மதிப்பு மிக்க] "9 முத்தான கருத்துகளை" படித்து புரிந்து கொள்ளுங்கள்; வாழ்வில், கடைபிடியுங்கள்.!! 1. உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை நீங்கள் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகிவிடுவீர்கள்... *"கௌரவர்கள்"* 2. நீங்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால், உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்... *"கர்ணன்"* 3. உங்கள் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி மொத்த அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு அலட்சியம் செய்யாதீர்கள்... *"அஸ்வத்தாமா...