முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யார் முட்டாள்?

நாம் அனைவருமே முல்லா நஸ்ருதீனைப் பற்றி நன்கு அறிவோம். சுமார் 800 வருடங்களுக்கு முன்னர், இந்த அறிவாளி மனிதர் முல்லா துருக்கி, ஈரான் பாக்தாக் நகரங்களில் உள்ள பாலை வனத்தில் வழக்கமாக அலைந்து திரிந்து கொண்டு இருப்பார். இவர் விவேகத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் முறையானது, முற்றிலும் வழக்கத்திற்கு மாறானாது. இவர் போதனை செய்வதோ அல்லது சொற்பொழிவு ஆற்றுவதோ கிடையாது. பண்டைக் கால நகைச்சுவை முறையையும், எளிமையான எடுத்துக் காட்டுகளையும் உபயோகித்து விவரித்துக் கூறுவார்.

  ஏதாவது ஒன்றைப் பற்றி வேடிக்கையான முறையில் விவரித்தால், அது மனதில் ஆழமாக வேரூன்றி விடும் என்பது முல்லாவின் நம்பிக்கை.

  ஒரு நாள் முல்லா கடைத்தெரு வழியாக சென்று கொண்டு இருந்தார். அவர் வழக்கமாக கழுதையின் மீது அமர்ந்து சவாரி செய்வார். அதன் பின் புறத்தை நோக்கி அமர்ந்து, சவாரி செய்வார். அவரது இந்த நடைமுறையானது மக்களை திகைப்படையச் செய்யவில்லை; மாறாக இது மக்களை சிரிக்கும்படி செய்தது.

  நல்லது. முல்லா அந்தக் கடைவீதியில் இருக்கும் கடைக்குச் சென்று, கொஞ்சம் பேரீச்சம் பழங்களை வாங்கினார். கடைக்காரருக்கு பணம் கொடுக்க வேண்டிய சமயத்தில், முல்லா, தன்னுடைய காலணிகளை கையில் எடுத்துக் கொண்டு, தரையில் உட்கார்ந்தார். காலணிகளின் மூலை முடுக்கெல்லாம் தேடினார்; ஆனால் பணம் அங்கு இல்லை. தன்னுடைய பைஜாமா பாக்கெட்டின் உள் தேடினார்; அங்கும் பணம் இல்லை. அந்த நேரத்தில், அங்கு ஒரு பெரிய கூட்டமே கூடி விட்டது. ஏற்கனவே, முல்லா கழுதையின் மீது வித்தியாசமான முறையில் அமர்ந்து சவாரி செய்வது ஒன்றே போதும், கூட்டம் கூடுவதற்கு. இப்போது அவர் செய்யும் இந்த வேடிக்கையான செயலானது, மக்களின் கவனத்தை அவரை நோக்கி ஈர்த்தது.    

  இப்போது முல்லா, ஒரு புறத்தில் பணத்தை வித்தியாசமான இடங்களில் தேடிக் கொண்டும்; மற்றொரு புறத்தில் தான் வாங்கிய பேரீச்சம் பழங்களை சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார்.

 இதைப் பார்த்த கடைக் காரருக்கு உண்மையாக சிறிது வருத்தம் ஏற்பட்டது. இந்த மனிதர் பணம் கிடைக்க வாய்ப்பில்லாத இடங்களில் அதைத் தேடிக் கொண்டும்; அதற்கு மேலாகப் பணம் கொடுக்காமல், அந்த பேரீச்சம் பழங்களை சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாரே! என்று கடைக் காரர் நினைத்தார். இவரால் பணத்தைக் கண்டு பிடிக்காமல் போய்விட்டால், நான் இவருடைய வயிற்றில் இருந்து பழங்களை எடுக்க முடியுமா? 

  இவ்வாறாக கடைக்காரர் எண்ணிக்கொண்டு இருக்கும் போது, முல்லா தன்னுடைய தொப்பியை தலையில் இருந்து எடுத்து, அதனுள் பணத்தைத் தேடிக் கொண்டு இருந்தார். முல்லாவின் இந்த செயலைப் பொறுக்க முடியாமல்,“ஏன் நீங்கள் இங்கும் அங்குமாக பணத்தைத் தேடுகிறீர்கள்? நீங்கள் முதலில் உங்கள் குர்தாவில் இருக்கும் பையில் பார்த்திருக்கலாமே? என்றார்.   

  இதற்கு, முல்லா நீ சொல்வது சரிதான். இந்த ஆலோசனையை நீ முன்பே கூறியிருக்கலாமே?என்றார்.

 இதைக் கூறிக் கொண்டு இருக்கும் போதே, முல்லா தன்னுடைய கையை குர்தாவின் பையிற்குள் நுழைத்து, அங்கிருந்து பணத்தை எடுத்து கடைக் காரரிடம் கொடுத்தார். அவரிடம், “இந்தப் பணம் இவ்வளவு நேரமாக இங்குதான் இருந்தது; இந்தப் பணத்தை எடுப்பதற்கான வாய்ப்பை நான் இப்போதுதான் கொடுத்தேன்” என்றார்.   
 
  இதைக் கேட்டவுடன் அந்தக் கூட்டத்தினர் அனைவரும் சிரித்தனர். அந்த கூட்டத்தில் உள்ள வயதான மனிதர் ஒருவர், “இவனுக்கு பைத்தியம் பிடித்து இருப்பது போல தெரிகிறது; பணம் குர்தாவில் இருப்பது தெரிந்தும், அதை இங்கும் அங்குமாக தேடிக் கொண்டு இருக்கிறார்.

  இப்போது இது முல்லாவுக்கான சந்தர்ப்பம்.

  அவர் என்ன செய்தார்? ஏன் இப்படி ஒரு நாடகத்தை நடத்தினார்? என்பதற்கு பதில் கூறும் நேரம் வந்தது. அந்தக் கூட்டத்தில் அனைவரையும் கடுமையாகப் பார்த்துப் பதில் கூறினார்.

  பணம் எங்கு வைத்திருக்கிறேன் என்பதை பார்க்க முடியாமல் போன அந்த சிறிய விஷயத்திற்காக நீங்கள் என்னை முட்டாள் என நினைக்கின்றீர்கள். ஆனால், தயவு செய்து நீங்கள் உங்களுக்குள் பாருங்கள்; உங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்தி எண்ணிப் பாருங்கள்; கடவுள் உங்கள் இதயத்தினுள் இருக்கிறார் என்பதை அறிந்த நிலையிலும், நீங்கள் அவரை வெளியே தேடிக்கொண்டுதான் இருக்கிறீர்கள்.   

  நான் முட்டாள் என்றால், இப்போது உங்களைப் பற்றி என்ன சொல்ல! நான் ஒரு சிறிய செயலுக்காக, முட்டாளாக இருக்கிறேன். ஆனால், நீங்களோ வாழ்க்கையின் மிகச் சிறந்த உண்மையைப் பற்றி அறியாமல் முட்டாளாக இருக்கிறீர்கள்.    

  முல்லாவினுடைய இந்த மிகப் பெரிய கோரிக்கையானது, இன்றும் மனித சமுதாயம் முழுமைக்கும் ஒரு பாடமாகவும்; கவனிக்கத் தக்க ஒரு படிப்பினையாகவும் இருக்கிறது.   

  அந்த முழு முதற் பொருளும், தெய்வீகமும் நம் இதயத்தினுள் இருக்கிறது என்று தெரிந்தும், நாம் அதை வெளியே எங்கேயோ தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். 


“ பாசம் உள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறார்;
அவர் கருணையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறார்.“

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...

புரட்சிகர மேதின நல்வாழ்த்துகள்

மே தினம் ஒரு தீபாவளி போல் புத்தாண்டு போல் ஒரு நாள் விடுமுறை களிப்பில் கரைந்து போகும் நாளா மேதினம்  நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டி சிறப்பு திரைப்படம்  பட்டி மன்றம்  குத்துப்பாட்டு கும்மாளம் என டிவி முன் கடந்து போகும் வழக்கமான பண்டிகை போன்றதா மே தினம் டாஸ்மாக் பார்களில் நண்பர்களோடு மயங்கிக் களிக்கவா இந்த மே தினம் திங்கட்கிழமையில் வந்ததால் சனி ஞாயிறையும் சேர்த்து மூன்று நாள் சுற்றுலாத் திட்டத்தில் அடங்கிப் போகும்  எளிய கேளிக்கை தகுதியுடையதா அது சினிமா தியேட்டரிலும் ஷாப்பிங் மால்களிலும் கூடி மாலையில் KFC யில் கோழிக்கால் கடிக்கும் குதூகலத்திற்கு கிடைத்த வாய்ப்பா மே நாள் விடுமுறை  ஒரு புத்தாண்டைப் போல் பரஸ்பரம் Happy may day சொல்லி கடக்கவா இந்நாள் உழைக்கும் மக்கள் சிந்திய உதிரத்தில் உதித்த தினமல்லவா இந்த மே தினம் அதில் தோய்ந்து உலகெங்கும் பறக்கும் செங்கொடியில் அதன் ரத்தக் கவிச்சி இன்னுமல்லவா இருக்கிறது அது நமது சென்ற நூற்றாண்டு பாட்டன்கள் பாட்டிகள் உயிர் மாய்ந்து  சிக்காகோ நகர வீதிகளில் சிந்திய உதிரமல்லவா  8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உ...

மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!

*சுமார் ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!* நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, நீங்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி, சுருக்கமாக, நீங்கள் ஒரு மனிதராக இருந்தால்..., கீழே உள்ள [மகாபாரதத்திலி ருந்து எடுத்து தொகுத்த..., மதிப்பு மிக்க] "9 முத்தான கருத்துகளை" படித்து புரிந்து கொள்ளுங்கள்; வாழ்வில், கடைபிடியுங்கள்.!! 1. உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை நீங்கள் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகிவிடுவீர்கள்... *"கௌரவர்கள்"* 2. நீங்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால், உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்... *"கர்ணன்"* 3. உங்கள் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி மொத்த அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு அலட்சியம் செய்யாதீர்கள்... *"அஸ்வத்தாமா...