முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரண்டு டைரிகள்

 ஒரு கணவனும் மனைவியும்  அவர்களது திருமணம் ஆண்டு நிறைவு விழா முடிந்த அன்று, தேநீர் அருந்திக் கொண்டு இருந்தனர்.    அவர்கள் இருவரும் மற்றவர் பார்வையில்  சிறந்த தம்பதிகள்.  இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்புடன் இருந்தனர். சில சமயங்களில் சிறுசிறு சச்சரவுகள் அவர்களுக்கு இடையே நிகழும். 
அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது,  மனைவி ஒரு கருத்தைக் கூறினாள்.  உங்களிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் என்னிடம் உள்ளன. நம் இருவருக்கும்  பேசுவதற்குக் கூட நேரம் கிடைப்பது இல்லை.  எனவே, நான் இரண்டு டைரிகளை வாங்கி இருக்கிறேன்.  இந்த வருடம் முழுவதும்  நாம் பேச வேண்டியதை இந்த டைரியில் எழுதுவோம்.  அடுத்த வருடம் இதே நாளில், நாம் இருவரும் இந்த டைரியை படிக்க வேண்டும்.  அதில் இருக்கும் விஷயங்களை கவனித்து,  அதை சரிசெய்ய, நாம் இருவரும்  சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும்.  கணவனுக்கும் இந்தக் கருத்து பிடித்து இருந்ததால், அதற்கு உடனே சம்மதித்தான். இருவரும் தத்தம் டைரியை  எடுத்துக் கொண்டனர்.
 
ஒரு வருடம் கழிந்தது. அந்த திருமண ஆண்டு விழா அன்று,  அவர்கள் இருவரும்,  தங்கள் டைரிகளை மாற்றிக் கொண்டார்கள்.   ஏற்கனவே அவர்கள் முன்பே தீர்மானித்தபடி  டைரியை படிக்கத் தொடங்கினர்.  கணவர் முதலில் மனைவியின் டைரியை  படிக்கத் தொடங்கினார். முதல் பக்கத்தில்,  இது நமது கல்யாண நாள்.  நீங்கள் எனக்கு அழகான பரிசு தரவில்லை. இரண்டாவது பக்கத்தில்,  என்னை  நீங்கள் டின்னருக்காக  ரெஸ்டாரெண்டுக்கு அழைத்துச் செல்லவில்லை.    மூன்றாவது பக்கத்தில், நீங்கள் என்னை சினிமாவுக்கு அழைத்து செல்வதாக முதலில்  வாக்குக் கொடுத்தீர்கள்.  ஆனால் கடைசி நேரத்தில்,  எனக்குக் களைப்பாக இருக்கிறது;  இன்று சினிமாவுக்குப் போக வேண்டாம் என்று முடிவு செய்தீர்கள்.  என்னுடைய  உறவினர்கள் வந்திருக்கும் போது, நீங்கள்  அவர்களிடம் சரியான முறையில்,  பேசவில்லை.  சில வருடங்களுக்குப் பிறகு  இன்று எனக்கு ஒரு புடவை வாங்கி வந்தீர்கள். அது மிகவும்  பழைய மாடலாக இருந்தது. 

  இது போல  நிறைய மோசமான குற்றச் சாட்டுக்கள் அந்த டைரியில்  எழுதப்பட்டு இருந்தன.  கண்ணீர் மல்க கணவர் டைரியை படித்து முடித்தார்.
தன் மனைவியிடம்,“ என்னை மன்னித்து விடு.  நான் வருத்தப்படுகிறேன்.  இது வரைக்கும் இப்படிப் பட்ட தவறுகள் பற்றி,  நான் அறிய வில்லை.  இனிமேல்  இவ்வாறான தவறுகளை திரும்பவும் செய்யாமல்,  நல்லதை செய்ய முயற்சி செய்கிறேன்”  என்றார். 
 
 இப்போது  மனைவி கணவனின்  டைரியை எடுத்தாள். முதல் பக்கம்  ஒன்று எழுதாமல் இருந்தது.  இரண்டாவது,  மூன்றாவது … …. ……என எல்லாமே வெற்றிடமாக இருந்தது.  50 முதல்  60 பக்கங்கள் வரை திருப்பினாள்.  அனைத்தும் காலியாகவே இருந்தன.    மனைவி மிகவும் ஏமாற்றம் அடைந்தாள்.   எனக்குத் தெரியும்,  உங்களால் என்னுடைய இந்த சின்ன ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாது என்று கோபம் அடைந்தாள்.  நான் மிக அதிகமான முயற்சி எடுத்து,  என் மனதில் உள்ள அனைத்தையும்,  இந்த ஒரு வருடமாக  உங்களுக்கு எழுதி வைத்து  இருக்கிறேன். ஆனால், நீங்கள்  எனக்காக இதைக் கூட செய்யாமல் இருந்திருக்கிறீர்கள்.   
 
 இதைக் கேட்ட கணவன்  புன் சிரிப்போடு,  கடைசி பக்கத்தில்  நான் அனைத்தையும் எழுதி இருக்கிறேன் என்று அன்பாகக் கூறினான்.  மனைவி  ஆவலோடு கடைசி பக்கத்தை திருப்பினாள். “ உன்னை எப்படி குறை கூற முடியும்?  வருடம் முழுவதும் என்னிடமும்,  என் குடும்பத்தினரிடமும்  நீ காட்டிய ஈடு இணையற்ற அன்பின் முன்,   நான் என்ன குறையைக் கண்டு பிடித்து,  இந்த டைரியில் எழுத முடியும்?     நீ தவறே செய்யாதவள் அல்ல. 

 உன்னுடைய அன்பு,  அர்ப்பணிப்பு,  எங்களுக்காக நீ செய்த தியாகம் – இவற்றின் முன்  உன்னுடைய சிறிய தவறுகள் எல்லாம்,  ஒன்றுமே இல்லாமல் மறைந்து விட்டன”. 

 நான், மன்னிக்க முடியாத,  எண்ணிக்கையில் அடங்காத தவறுகளை செய்த போதும்,  என்னுடைய வாழ்க்கையின்  ஒவ்வொரு கட்டத்திலும் நீ எனது நிழல் போல் இருந்து, உதவி செய்து இருக்கிறாய்.   எனது சொந்த நிழலில் நான் குற்றம் காண முடியுமா?
இதைப் படித்தவுடன்,  மனைவியின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. கணவனிடம் இருந்த  தன் டைரியை வாங்கி  இரண்டையும்  தீயில் இட்டாள். அத்துடன், தனது வேறுபாடுகள், குறைகள் அனைத்தையும் தீயில் கருக்கி விட்டாள்.
புதிதாக மணம் செய்த தம்பதிகளைப் போல, திரும்பவும் அவர்கள் வாழ்க்கை,  அன்பின் துணையோடு மலர்ந்து மணம் வீசியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...

புரட்சிகர மேதின நல்வாழ்த்துகள்

மே தினம் ஒரு தீபாவளி போல் புத்தாண்டு போல் ஒரு நாள் விடுமுறை களிப்பில் கரைந்து போகும் நாளா மேதினம்  நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டி சிறப்பு திரைப்படம்  பட்டி மன்றம்  குத்துப்பாட்டு கும்மாளம் என டிவி முன் கடந்து போகும் வழக்கமான பண்டிகை போன்றதா மே தினம் டாஸ்மாக் பார்களில் நண்பர்களோடு மயங்கிக் களிக்கவா இந்த மே தினம் திங்கட்கிழமையில் வந்ததால் சனி ஞாயிறையும் சேர்த்து மூன்று நாள் சுற்றுலாத் திட்டத்தில் அடங்கிப் போகும்  எளிய கேளிக்கை தகுதியுடையதா அது சினிமா தியேட்டரிலும் ஷாப்பிங் மால்களிலும் கூடி மாலையில் KFC யில் கோழிக்கால் கடிக்கும் குதூகலத்திற்கு கிடைத்த வாய்ப்பா மே நாள் விடுமுறை  ஒரு புத்தாண்டைப் போல் பரஸ்பரம் Happy may day சொல்லி கடக்கவா இந்நாள் உழைக்கும் மக்கள் சிந்திய உதிரத்தில் உதித்த தினமல்லவா இந்த மே தினம் அதில் தோய்ந்து உலகெங்கும் பறக்கும் செங்கொடியில் அதன் ரத்தக் கவிச்சி இன்னுமல்லவா இருக்கிறது அது நமது சென்ற நூற்றாண்டு பாட்டன்கள் பாட்டிகள் உயிர் மாய்ந்து  சிக்காகோ நகர வீதிகளில் சிந்திய உதிரமல்லவா  8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உ...

மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!

*சுமார் ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!* நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, நீங்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி, சுருக்கமாக, நீங்கள் ஒரு மனிதராக இருந்தால்..., கீழே உள்ள [மகாபாரதத்திலி ருந்து எடுத்து தொகுத்த..., மதிப்பு மிக்க] "9 முத்தான கருத்துகளை" படித்து புரிந்து கொள்ளுங்கள்; வாழ்வில், கடைபிடியுங்கள்.!! 1. உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை நீங்கள் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகிவிடுவீர்கள்... *"கௌரவர்கள்"* 2. நீங்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால், உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்... *"கர்ணன்"* 3. உங்கள் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி மொத்த அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு அலட்சியம் செய்யாதீர்கள்... *"அஸ்வத்தாமா...