முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோதுமை தானியத்தின் மந்திரம்

முன்னொரு காலத்தில் அமர்சென் என்ற ஒரு புத்திசாலி மனிதர், ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தார்.     அவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர்.  அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவரவர் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து  வந்தனர்.

 அமர்சென்னுக்கு வயதாகி விட்டது.   அவரது மனைவியும் இறந்து விட்டாள்.  தன்னுடைய பணம்  சொத்துக்களை  முறைப்படி,  கொடுக்க தீர்மானித்தார்.     இந்த முடிவுக்கு வந்த பிறகு,  தன்னுடைய மகன்கள், மருமகள்களை அழைத்தார்.  ஒவ்வொரு ஜோடிக்கும்  அதாவது ( ஒரு மகன், மருமகள் இவ்வாறு நான்கு ஜோடிகள்). 

  ஒவ்வொருவருக்கும் ஐந்து கோதுமை தானியங்களைக் கொடுத்தார்.  எண்ணி  ஐந்தே ஐந்து  கோதுமைகள் தான்.  நான் இப்போது, தீர்த்த  யாத்திரை செல்கிறேன்.   நான்கு வருடங்கள் கழித்து  திரும்பி வருவேன்.  நான் திரும்பி வரும் வரை இந்த கோதுமைத் தானியங்களை யார் முறைப் படி, கவனமாக வைத்துள்ளார்களோ,  அவர்களுக்குத்தான் என்னுடைய சொத்து முழுவதும் சேரும்,  என கூறி விட்டு சென்றார்.  

 முதல் மகனும், மருமகளும்  இந்த வயதான கிழவருக்கு என்ன வாயிற்று.   நான்கு வருடங்களாக இந்த ஐந்து கோதுமைகளைப் பற்றி யார் ஞாபகம் வைத்துக் கொள்ளப் போகிறார்கள்.  எப்படியும்  நாம்தான்  மூத்தவர்கள்.  சொத்துக்கு முதல் உரிமை நமக்குத்தான் என்ற எண்ணத்துடன்,  அந்த கோதுமைத் தானியங்களை தூக்கி எறிந்து விட்டனர். 

இரண்டாவது மகனும், மருமகளும்  இந்த தானியங்களைப் பாதுகாத்து வைப்பது  மிகவும் கஷ்டம் இந்த தானியங்களை நாம் சாப்பிட்டால் இதில் ஏதோ நல்லது இருக்கும். அப்பாவும் மகிழ்ச்சி அடைவார்.  திரும்பி வந்ததும்  நம்மை வாழ்த்தி,  சொத்து முழுவதும்  நமக்குக் கொடுப்பார் என முடிவு செய்து, அந்த தானியங்களை இருவரும் சாப்பிட்டனர்.
மூன்றாவது மகனும், மருமகளும் மிகவும் மத நம்பிக்கையும்,  கடவுள் நம்பிக்கையும் உடையவர்கள்.    கோவிலில் இருக்கும்  கடவுள் சிலைகளை பாதுகாப்பது போல், இந்த தானியங்களையும்  நாம் பாதுகாத்து  வைத்து,  அப்பா வந்தவுடன் பத்திரமாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்தனர்.  
 
 நான்காவது மகனும் மருமகளும்  இதைப் பற்றி அறிவு பூர்வமாக சிந்தனை செய்தார்கள்.  அவ்விருவரும்  அந்த ஐந்து கோதுமை தானியங்களையும், பூமியில் விதைத்தனர்.     செடிகள் வளர்ந்தன.  கொஞ்சம் கோதுமைகள் கிடைத்தன.  அதையும் அவர்கள்  விதைத்தனர்.  இவ்வாறு  ஒவ்வொரு வருடமும்,  கோதுமை தானியங்களின் அளவை  அதிகரித்தனர். 

  அந்த ஐந்து கோதுமைகள்,  இப்போது  ஐந்து   சாக்குகள் ஆகி,  இருபத்தைந்து சாக்குகள் ஆகி,  பிறகு  ஐம்பது சாக்குகளாக அதிகரித்து விட்டன.
நான்கு வருடங்கள் கழிந்தன.  அமர் சென் திரும்பி வந்தார்.  நான்கு ஜோடிகளையும் அழைத்தார்.  கோதுமையை அவர்கள் என்ன செய்தனர்,  என்பதைப் பற்றி கேட்டார். 

 நான்காவது மகனிடமும் மருமகளிடமும் அவர் கேட்ட போது  அந்த மகன், “அப்பா,  நீங்கள் கொடுத்த அந்த கோதுமைகள்,  இப்போது 50 சாக்கு மூட்டை கோதுமைகளாக  மாறிவிட்டன.  அவற்றை பத்திரமாக உணவுக் களஞ்சியத்தில் வைத்து இருக்கின்றோம்.   அவை இப்போது, உங்களுக்குத்தான் என்றனர். 

 இதைக் கேட்டவுடன் அமர்சென்  மகிழ்ச்சி அடைந்து உடனே பணப் பெட்டியின் சாவிகளை நான்காவது  மகன், மருமகளிடம் கொடுத்தார்.  நீங்கள் இருவரும்தான்  என்னுடைய சொத்துக்கு உண்மையான வாரிசு என்றார்.

ஒரு சின்னஞ்சிறு ஆரம்பம்,  எந்த அளவு ஒரு பெரிய நிலையில் தன்மை மாற்றம் அடையச் செய்ய முடியும் என்பதற்கு இந்த ஐந்து தானிய விதைகள், ஒரு அடையாளம்.  அதே போல, சின்னஞ்சிறு பொறுப்பு,  என்பதை  கையில்  இருக்கும் ஆதாரத்தை வைத்து, மிகச் சிறந்த அளவுக்கு நிறைவேற்ற முடிகிறது என்றால், அது அற்புதமான விளைவுகளை எடுத்துக் கொண்டு வரும் என்பதுதான். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...

புரட்சிகர மேதின நல்வாழ்த்துகள்

மே தினம் ஒரு தீபாவளி போல் புத்தாண்டு போல் ஒரு நாள் விடுமுறை களிப்பில் கரைந்து போகும் நாளா மேதினம்  நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டி சிறப்பு திரைப்படம்  பட்டி மன்றம்  குத்துப்பாட்டு கும்மாளம் என டிவி முன் கடந்து போகும் வழக்கமான பண்டிகை போன்றதா மே தினம் டாஸ்மாக் பார்களில் நண்பர்களோடு மயங்கிக் களிக்கவா இந்த மே தினம் திங்கட்கிழமையில் வந்ததால் சனி ஞாயிறையும் சேர்த்து மூன்று நாள் சுற்றுலாத் திட்டத்தில் அடங்கிப் போகும்  எளிய கேளிக்கை தகுதியுடையதா அது சினிமா தியேட்டரிலும் ஷாப்பிங் மால்களிலும் கூடி மாலையில் KFC யில் கோழிக்கால் கடிக்கும் குதூகலத்திற்கு கிடைத்த வாய்ப்பா மே நாள் விடுமுறை  ஒரு புத்தாண்டைப் போல் பரஸ்பரம் Happy may day சொல்லி கடக்கவா இந்நாள் உழைக்கும் மக்கள் சிந்திய உதிரத்தில் உதித்த தினமல்லவா இந்த மே தினம் அதில் தோய்ந்து உலகெங்கும் பறக்கும் செங்கொடியில் அதன் ரத்தக் கவிச்சி இன்னுமல்லவா இருக்கிறது அது நமது சென்ற நூற்றாண்டு பாட்டன்கள் பாட்டிகள் உயிர் மாய்ந்து  சிக்காகோ நகர வீதிகளில் சிந்திய உதிரமல்லவா  8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உ...

மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!

*சுமார் ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!* நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, நீங்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி, சுருக்கமாக, நீங்கள் ஒரு மனிதராக இருந்தால்..., கீழே உள்ள [மகாபாரதத்திலி ருந்து எடுத்து தொகுத்த..., மதிப்பு மிக்க] "9 முத்தான கருத்துகளை" படித்து புரிந்து கொள்ளுங்கள்; வாழ்வில், கடைபிடியுங்கள்.!! 1. உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை நீங்கள் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகிவிடுவீர்கள்... *"கௌரவர்கள்"* 2. நீங்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால், உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்... *"கர்ணன்"* 3. உங்கள் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி மொத்த அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு அலட்சியம் செய்யாதீர்கள்... *"அஸ்வத்தாமா...