முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு ஆட்டு மந்தை

முன்னொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார்.  அந்த அரசர் தன் அமைச்சரிடம், “செம்மறி ஆடுகளின் பிறப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  அவை மந்தை மந்தையாய் இருக்கின்றன.  அதே நேரத்தில் நாய்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. ஏன் இப்படி?” என்று கேட்டார்.  
            அமைச்சர் அரசரிடம், “எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள்.  நாளை இதற்கு நான் பதில் கூறுகிறேன் என்றார்”. அன்று மாலை அமைச்சர் இரண்டு அறைகளை தயார் செய்தார்.    அரசரும் அதைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.  ஒரு அறையில் 20 செம்மறி ஆடுகளை வைத்து, அந்த அறையின் நடுவே ஒரு கூடை நிறைய ஆடுகளுக்கு உரிய உணவை அதில் அமைச்சர் வைத்தார்.  பின்பு, அந்த அறையை பூட்டி விட்டார்.
            அடுத்த அறையில் 20 நாய்களை வைத்து, அந்த அறையிலும் ஒரு கூடை நிறைய ரொட்டிகளை உணவாக வைத்தார்.  பிறகு அந்த அறையையும் பூட்டி விட்டார்.
            அடுத்த நாள் காலை அமைச்சர் அரசருடன் அங்கு வந்தார்.  முதல் அறையின் கதவை திறந்தார்.  ஆடுகள் அனைத்தும் ஒன்றன் மீது ஒன்றாக தலை சாய்த்து வசதியாகத் தூங்கிக் கொண்டு இருந்தன.    உணவு வைத்திருந்த கூடை காலியாக இருந்தது.
            அமைச்சர் நாய்கள் இருந்த அடுத்த அறையைத் திறந்தார்.  அனைத்து நாய்களும் இறந்து கிடந்தன.  கூடையில் இருந்த ரொட்டிகள் அப்படியே இருந்தன. மன்னர் ஆச்சரியம் அடைந்தார்.  அமைச்சர் அரசரிடம், “ நாய்கள் ஒரு சிறிய துண்டு ரொட்டியைக் கூட உண்ணாமல்,  ஒன்றுக்கொன்று சண்டை போட்டு இறந்து விட்டன.  ஆனால், ஆடுகளோ,  தங்கள் உணவை பகிர்ந்து தின்று,  அமைதியாக தூங்குகின்றன.    ஆடுகளின் பிறப்பின் விகிதம் அதிகரிப்பதற்கு, இதுதான் காரணம் என்று அமைச்சர் கூறினார்.  நாய்களோ தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல், தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டன. 
  
 அரசர் அமைச்சரின் விளக்கத்தைக் கேட்டு மிகவும் திருப்தி அடைந்தார். அமைச்சருக்கு நிறைய வெகுமதிகள் கொடுத்தார்.  பரஸ்பர அன்பும், சகோதரத்துவமும்  முக்கியம் என்பதை அரசர் உணர்ந்தார்.
            அமைச்சர் அரசருக்கு இந்த கருத்தின் அடிப்படையில்  மற்றொரு கதையைக் கூறினார்.
           முன்னொரு காலத்தில், பிரம்மா தேவர்களையும், அசுரர்களையும் தன் அவைக்கு அழைத்து  ஒரு விருந்து வைத்தார்.  இருவரையும் பிரம்மா  ஒன்று போல நடத்தினாலும்,  தேவர்களுக்கு  சிறிது அதிக மரியாதை கொடுத்து நடத்தினார்.    அசுரர்கள், பிரம்மா தங்களை விட தேவர்களுக்கு அதிக உபசரிப்பும்,  மரியாதையும் கொடுத்து விட்டு,  வெளியே இருவரையும்  ஒரே மாதிரி நடத்துவது போல நடிக்கிறார் என்பதை உணர்ந்தனர்.  
            அசுரர்கள்  பிரம்மாவிடம்,“ நீங்கள் தேவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்;  இதய பூர்வமாக அவர்களுக்கு அதிக மரியாதை கொடுக்கிறீர்கள்.   பிறகு, எதற்காக எங்களை இங்கு  வரவழைக்கிறீர்கள்?” என்றனர்.     
            பிரம்மா எவ்வளவோ விளக்கம் கூறியும் அசுரர்களை சமாதானம் செய்ய முடியவில்லை.    எனவே  பிரம்மா கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார். அசுரர்கள் ஒரு போதும் தேவர்களுக்கு சமமாக இருக்க முடியாது என்பதை அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும். 
            பிரம்மா அசுரர்களின் அரசனிடம், “ நீங்கள் தேவர்களைப் போல ஆகி விட்டால்,  நான் மகிழ்ச்சி அடைவேன். நீங்கள் தோல்வி அடையக் கூடாது” என்றார்.  “நாங்கள், தேவர்களை விட முன்னேறிதான் இருக்கிறோம் என்று அசுரர்களின் அரசன் உறுதிபட கூறினான்”.
            நீங்கள் தவறாக நினைக்காமல் இருந்தால்,  நான் உங்களுக்கு ஒரு சோதனை வைக்கிறேன், என்றார் பிரம்மா.  அதற்கு அசுரர்களின் அரசன் சம்மதித்தான்.
            விருந்து சாப்பிடும் நேரத்தில், பிரம்மா தேவர்கள் மற்றும் அசுரர்கள்  அனைவரது கைகளையும்  கம்புடன் சேர்த்து  இறுக்கமாகக் கட்டி விட்டார். விரல்கள் வரை கட்டி விட்டார்.  எனவே ஒருராலும்  கையை மடக்க முடியாது. 
            முதலில் பிரம்மா, அசுரர்கள் முன்பு  தட்டு நிறைய லட்டுகளை வைத்தார்.  யார் அதிக லட்டுகளை உண்கின்றார்களோ அவர்கள்தான்  சிறந்தவர்கள் என்றார் பிரம்மா.
             அசுரர்கள் லட்டை  கையில் எடுத்தனர்.  கைகள் இறுக்கமாகக் கட்டி இருப்பதால்,  லட்டை வாய் அருகில் கொண்டு போக முடியவில்லை.  அவர்கள் லட்டை எறிந்து வாயில் செல்லும் படி முயற்சி செய்தார்கள்.      அதுவும் முடிய வில்லை.

 நிறைய முயற்சிகள் செய்தும்,  ஒருவர் கூட வெற்றி பெற முடிய வில்லை.
            இப்போது,  தேவர்களை அழைத்து அவர்கள் முன்  தட்டில் லட்டுகளை பிரம்மா வைத்தார்.  தேவர்கள் கைகளும் கட்டப்பட்டுதான் இருந்தன.  தேவர்கள் ஜோடி ஜோடியாக அமர்ந்து ஒருவருக்கொருவர் லட்டை ஊட்டி விட்டனர்.

  அசுரர்கள்  அனைவரும் இந்த நிகழ்ச்சியைக் கவனித்து பார்த்தனர். முடிவில், அசுரர்கள்,  தேவர்கள்  தங்களை விட சிறந்தவர்கள் என்பதை ஒப்புக் கொண்டனர்.  
        அமைச்சரின் இந்தக் கதையைக் கேட்டு அரசர்,  மிக்க மகிழ்ச்சி அடைந்தார். எந்த செயலுமே அதில் ஒற்றுமையும்,  அன்பும் இருந்தால்  அதனை நல்ல முறையில்  சாதிக்க முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...

புரட்சிகர மேதின நல்வாழ்த்துகள்

மே தினம் ஒரு தீபாவளி போல் புத்தாண்டு போல் ஒரு நாள் விடுமுறை களிப்பில் கரைந்து போகும் நாளா மேதினம்  நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டி சிறப்பு திரைப்படம்  பட்டி மன்றம்  குத்துப்பாட்டு கும்மாளம் என டிவி முன் கடந்து போகும் வழக்கமான பண்டிகை போன்றதா மே தினம் டாஸ்மாக் பார்களில் நண்பர்களோடு மயங்கிக் களிக்கவா இந்த மே தினம் திங்கட்கிழமையில் வந்ததால் சனி ஞாயிறையும் சேர்த்து மூன்று நாள் சுற்றுலாத் திட்டத்தில் அடங்கிப் போகும்  எளிய கேளிக்கை தகுதியுடையதா அது சினிமா தியேட்டரிலும் ஷாப்பிங் மால்களிலும் கூடி மாலையில் KFC யில் கோழிக்கால் கடிக்கும் குதூகலத்திற்கு கிடைத்த வாய்ப்பா மே நாள் விடுமுறை  ஒரு புத்தாண்டைப் போல் பரஸ்பரம் Happy may day சொல்லி கடக்கவா இந்நாள் உழைக்கும் மக்கள் சிந்திய உதிரத்தில் உதித்த தினமல்லவா இந்த மே தினம் அதில் தோய்ந்து உலகெங்கும் பறக்கும் செங்கொடியில் அதன் ரத்தக் கவிச்சி இன்னுமல்லவா இருக்கிறது அது நமது சென்ற நூற்றாண்டு பாட்டன்கள் பாட்டிகள் உயிர் மாய்ந்து  சிக்காகோ நகர வீதிகளில் சிந்திய உதிரமல்லவா  8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உ...

மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!

*சுமார் ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!* நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, நீங்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி, சுருக்கமாக, நீங்கள் ஒரு மனிதராக இருந்தால்..., கீழே உள்ள [மகாபாரதத்திலி ருந்து எடுத்து தொகுத்த..., மதிப்பு மிக்க] "9 முத்தான கருத்துகளை" படித்து புரிந்து கொள்ளுங்கள்; வாழ்வில், கடைபிடியுங்கள்.!! 1. உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை நீங்கள் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகிவிடுவீர்கள்... *"கௌரவர்கள்"* 2. நீங்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால், உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்... *"கர்ணன்"* 3. உங்கள் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி மொத்த அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு அலட்சியம் செய்யாதீர்கள்... *"அஸ்வத்தாமா...