முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அறம் மற்றும் கடமை

முன்னொரு காலத்தில் நல்ல குணமும் ஒழுக்கமும் நிறைந்த மனிதன் ஒருவன், தன் மனைவி குழந்தைகளோடு புனித யாத்திரை மேற்கொண்டார்.  பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.  புனித யாத்திரையை அவர் மேற்கொண்ட காலமோ, கடுமையான கோடை காலம் ஆகும். 
பல மைல்கள் தூரம் கடந்த பிறகு,  அவர்கள் கொண்டு வந்து இருந்த தண்ணீரும் காலியாகி விட்டது.  குடும்பமே தண்ணீர் தாகத்தால் வருந்தியது.  கடுங்கோடை என்பதால்  வழியில் எங்குமே தண்ணீர் இல்லை.  குழந்தைகள் தாகத்தால் தவித்தனர்.  இந்த மனிதனுக்கோ எப்படி இந்த பிரச்சனையைத் தீர்ப்பது என்று தெரியாமல் தவித்தார்.  எந்த வழியும் தெரியாமல்,  கடவுளிடம் முறையிட ஆரம்பித்தார்.  கடவுளிடம்,  ஓ பிரபுவே!  தயவு செய்து இந்த சூழ்நிலையை சமாளிக்க நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார்.  சிறிது நேரத்தில், கண்ணுக்கு எட்டிய தூரத்தில், ஒரு சந்நியாசி ஓரிடத்தில் உட்கார்ந்து  தியானம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.  அவரிடம் சென்று தன் பிரச்சனையைக் கூறினார்.  சந்நியாசி அவரிடம்,  “இங்கிருந்து ஒரு மைல் தொலைவில் ஒரு சிறிய ஆறு வடக்கு நோக்கி பாய்ந்து செல்கிறது.  நீ அங்கு சென்று,  உங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ளலாம்” என்றார்.  அந்த மனிதன் இதைக்  கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.   சந்நியாசிக்கு நன்றி கூறினான்.
அவனது மனைவியாலோ  அல்லது குழந்தைகளாலோஇனிமேல்  ஒரு அடி கூட  நடக்க முடியாத நிலையில் இருந்தனர்.  அவர்களை அங்கேயே இருக்க வைத்து விட்டு, அந்த மனிதன் தண்ணீர் கொண்டு வரச் சென்றான். தண்ணீரை எடுத்துக் கொண்டு திரும்பி வரும்போது, அவன் எதிரே ஐந்து பேர்கள் வந்தனர்.  அவர்களும் கடுமையான தாகத்தால், தவித்த படி இருந்தனர்.  அந்த மோசமான நிலையில்,  அவர்களைப் பார்த்த, அந்த நல்ல மனிதன் தான் கொண்டு வந்த தண்ணீர் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்து விட்டு  மீண்டும் ஆற்றுக்கு சென்றான்.
இரண்டாவது முறையாக தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும் போது, திரும்பவும் தாகத்தால் தவிக்கும் சில பேரை பார்க்கிறான்.   திரும்பவும் தண்ணீரைக் கொடுத்து விடுகிறான்.  மூன்றாவது முறையாக தண்ணீரை எடுத்துக் கொண்டு  தன் குடும்பத்தினரிடம் வருகிறான்.  மனைவியும்,  குழந்தைகளும் மயக்கம் அடைந்து கீழே விழுந்து கிடக்கின்றனர்.  உணர்விழந்த நிலையில் கிடக்கும் அவர்கள் முகத்தில் தண்ணீரைத் தெளித்து எழுப்பிப் பார்க்கிறான்.  அவர்கள் விழிக்கவே இல்லை. 
அவன் அழுது கொண்டே,  அந்த சந்நியாசியிடம் ஓடிச் சென்று,  அவர் பாதங்களில் விழுந்து கதறுகிறான்.  “நான் என்ன பாவம் செய்தேன்?  என் குடும்பம், இந்த நிலையில் இருக்கிறதே!  நான் தாகத்தில் தவிக்கும் மற்றவர்களுக்கு உதவிதானே செய்தேன்;  அது ஒரு புனிதமான செயல்தான்;  என் குடும்பத்தினரைக் காப்பாற்றுங்கள்”.
சந்நியாசி அவனைப் பார்த்து, “ஓ புண்ணிய ஆன்மாவே!  நீ ஆற்றில் இருந்து கொண்டு வந்த தண்ணீரை, தாகத்தோடு வந்த  மற்றவர்களுக்குக் கொடுத்து உன் பாத்திரத்தைக் காலிப் பாத்திரம் ஆக்கினாய்.  இதிலிருந்து,  உனக்கு என்ன நன்மை கிடைத்தது?”
அந்த மனிதன்,  “உதவி செய்வதால்  என்ன கிடைக்கும் என்பதை நான் ஒரு போதும் நினைத்துக் கூட பார்ப்பது இல்லை.  எனக்கு சரி என்று நான் உணர்ந்ததை செய்தேன்.  எந்த சுய நலமான எண்ணமும் எனக்கு இல்லை” என்றான். 
அதற்கு சந்நியாசி, “இந்த மாதிரி நீ செய்த நல்ல காரியங்களுக்கும்,நல்ல கருத்துக்களுக்கும்என்ன பயன் கிடைத்தது?  நீ உன்னுடைய  கடமையை நிறைவேற்றாமல்,  மற்றவர்களுக்கு உதவி செய்வது எப்படி?  உன்னுடைய மனைவி, குழந்தைகளுக்கு நீ உதவி செய்யாமல் மற்றவர்களுக்கு  உதவி செய்வது எப்படி நன்மை தரும்?  நல்ல செயல்களை செய்வதற்கு நீ  இன்னும் சரியாக கற்க வில்லை.   நான் செய்த மாதிரி, நீ செய்திருக்க வேண்டும்” என்றார்.
எப்படி என்று அந்த மனிதன் ஆவலாகக் கேட்டான்.  அதற்கு சந்நியாசி அவனைப் பார்த்து,“நீ என்னிடம் தாகத்தைத் தணிக்க வழி கேட்ட போது, நான் உனக்கு தண்ணீர் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக ஆற்றுக்குச் செல்லும் பாதையை காட்டினேன். இது போல் உன்னிடம் தாகமாக வந்தவர்களை நீயும் ஆற்றுக்குச் செல்ல வழி காட்டி இருக்க வேண்டும்.  அவர்களும் ஆற்றில் சென்று தாகத்தைத் தணித்து இருப்பார்கள்.   யாருமே, மற்றவர்களுக்காக, தங்கள் பாத்திரங்களை காலியாக்க மாட்டார்கள்.” இந்த அறிவுரைகளை அவனுக்கு வழங்கி விட்டு,  அவனது குடும்பத்தினர்களுக்கும் ஆசிகளைக் கொடுத்து விட்டு,  அவர் மறைந்து விட்டார்.
அந்த மனிதன் ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டான்.

   அவனுக்கு இப்போது எல்லாம் தெளிவாகப் புரிந்து விட்டது.  நம்முடைய பொறுப்புக்களைக் கவனிக்காமல்,  எந்த நல்ல காரியத்தையும் செய்வதில் அர்த்தம் இல்லை என்பதை புரிந்து கொண்டான்.  நமது கடமைகளை நன்கு செய்து  அதன் மூலம்  மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருந்து, நல்ல வழிமுறையையும்  அவர்களுக்குக் காட்ட வேண்டும்.   விவேகத்தோடு நாம் உதவி செய்ய வேண்டும்.  கடவுளின் பாதையையும்,  உண்மையின் வழியையும்  மற்றவர்களுக்குக் காட்டுவதே  மிகச் சிறந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...

புரட்சிகர மேதின நல்வாழ்த்துகள்

மே தினம் ஒரு தீபாவளி போல் புத்தாண்டு போல் ஒரு நாள் விடுமுறை களிப்பில் கரைந்து போகும் நாளா மேதினம்  நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டி சிறப்பு திரைப்படம்  பட்டி மன்றம்  குத்துப்பாட்டு கும்மாளம் என டிவி முன் கடந்து போகும் வழக்கமான பண்டிகை போன்றதா மே தினம் டாஸ்மாக் பார்களில் நண்பர்களோடு மயங்கிக் களிக்கவா இந்த மே தினம் திங்கட்கிழமையில் வந்ததால் சனி ஞாயிறையும் சேர்த்து மூன்று நாள் சுற்றுலாத் திட்டத்தில் அடங்கிப் போகும்  எளிய கேளிக்கை தகுதியுடையதா அது சினிமா தியேட்டரிலும் ஷாப்பிங் மால்களிலும் கூடி மாலையில் KFC யில் கோழிக்கால் கடிக்கும் குதூகலத்திற்கு கிடைத்த வாய்ப்பா மே நாள் விடுமுறை  ஒரு புத்தாண்டைப் போல் பரஸ்பரம் Happy may day சொல்லி கடக்கவா இந்நாள் உழைக்கும் மக்கள் சிந்திய உதிரத்தில் உதித்த தினமல்லவா இந்த மே தினம் அதில் தோய்ந்து உலகெங்கும் பறக்கும் செங்கொடியில் அதன் ரத்தக் கவிச்சி இன்னுமல்லவா இருக்கிறது அது நமது சென்ற நூற்றாண்டு பாட்டன்கள் பாட்டிகள் உயிர் மாய்ந்து  சிக்காகோ நகர வீதிகளில் சிந்திய உதிரமல்லவா  8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உ...

மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!

*சுமார் ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!* நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, நீங்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி, சுருக்கமாக, நீங்கள் ஒரு மனிதராக இருந்தால்..., கீழே உள்ள [மகாபாரதத்திலி ருந்து எடுத்து தொகுத்த..., மதிப்பு மிக்க] "9 முத்தான கருத்துகளை" படித்து புரிந்து கொள்ளுங்கள்; வாழ்வில், கடைபிடியுங்கள்.!! 1. உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை நீங்கள் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகிவிடுவீர்கள்... *"கௌரவர்கள்"* 2. நீங்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால், உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்... *"கர்ணன்"* 3. உங்கள் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி மொத்த அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு அலட்சியம் செய்யாதீர்கள்... *"அஸ்வத்தாமா...