முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேவை நிம்மதி

*💐💐🙏🏻💐💐💐"இன்றைய சிந்தனை'..(18.04.2024)..*
...............................

*"’’*
..................................

செல்வம், அதிகாரம், பணம், புகழ், மதிப்பு ஆகியவை மன அமைதியை அழிப்பன. வாழ்வில் என்ன என்ன அடைய வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றி மனதை அலைக்கழிக்கும். 

தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவன், அதிகமான சொத்து, செல்வம் அடைந்தவன்,  ஆகியோருக்கு நிம்மதி கெட்டு விடும்.உறக்கம் வராது.

*மனநிம்மதி இருந்தால் தான் எந்த செயலையும் பதட்டம் இல்லாமல் ஒருவரால் எளிதில் செய்ய முடியும்..* தன் தகுதியை உணர்ந்து அதற்குரிய செயலில் ஈடுபட வேண்டும்.

மனதில் நிம்மதியும் தூக்கமும் இன்றித் தவித்த ஒருவன் அருகில் இருந்த ஆசிரமத்தில் பெரியவரை சந்தித்து எனக்கு எல்லாம் இருந்தும் மன நிம்மதி மட்டும் இல்லை என்றான். அதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள் என்றான்..

அதற்கு அந்தப் பெரியவர் *தேவையில்லா சுமைகளை சுமப்பதும், தெரியக் கூடாத ரகசியங்களைத் தெரிந்துக் கொள்வதாலும் நிம்மதி போய் விடுகின்றது.* 

நீ முதலில் ஆசிரமத்தில் சாப்பிடு என்றார். சாப்பிட்டப் பின் ஒரு படுக்கையைக் காண்பித்து படுக்கச் சொன்னார்
அவனிடம் ஒரு கதை சொன்னார் பெரியவர். 
"ரயில் புறப்படும் போது அவசரமாக தலையில் சுமையுடன் ஒருவன் ஓடி வந்து ஏறி இடம் பிடித்து அமர்ந்து கொண்டான். ரயில் புறப்பட்டது. 

ஆனால் அவன் தன் தலையில் இருந்த சுமையை மட்டும் கீழே இறக்கி வைக்கவில்லை.  சுமையைத் தலையில் சுமந்து வந்த ஆளைப் பார்த்து அதைக் கீழே இறக்கி வைக்கச் சொன்னார் அவன் அருகில் இருந்தவர்..

அவன் வேண்டாம். ரயில் என்னை மட்டும் சுமந்தால் போதும். என் சுமையை நான் சுமந்து கொள்வேன் என்றான்.

இதைக் கேட்ட அங்கு இருந்தவர்கள் சிரித்து விட்டு,

'பைத்தியக்காரன், இரயிலை விட்டு இறங்கும் போது மூட்டையை தூக்கிக்கிட்டு இறங்கினால் போதாதா?
என்றான்'. 

அந்தப் பெரியவர் பணக்காரனைப் பார்த்து, உன்னைப் போல் அவனுக்கும் அது தெரியவில்லை என்றார் .என்ன சொல்கிறீர்கள் என்றவனிடம், 

"வாழ்க்கை என்பது ரயில் பயணம் போன்றது. பயணம் முழுவதும் சுமையை சுமந்து கொண்டு செல்பவர்கள் நிம்மதியாக வாழ முடியாது, 

தேவைப்படுபனவற்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். என்றார்..

*ஆம்.தோழர்களே.*

*உங்களுக்கு நிம்மதி கிடைக்க வேண்டும் என்றால்,உங்களிடம் இருப்பதை இல்லாதவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.* 

*அது அறிவாக இருந்தாலும் சரி, பணம், பொருளாக இருந்தாலும் சரி.* 

*அந்த மனித நேயம் நீங்கள் கொண்டால், மன நிம்மதி அடைவதோடு மகிழ்ச்சியான வாழ்க்கையை நீங்கள் வாழலாம்....✍🏼🌹*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குனி உத்திரம்

வரப்போகிறது.. பங்குனி உத்திரம்.. பன்னிரு கரங்களை கொண்ட முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. 🔱 தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாகவும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் விளங்குகிறது.பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். 🔱 அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. 🔱 பங்குனியில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. அது ஏன்?.. இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.. பங்குனி உத்திரம் ஏன் சிறப்பு? 🔱 பங்குனி உத்திரத்தின் சிறப்பு, மாதத்தில் 12ஆக பங்குனியும், நட்சத்திரத்தில் 12ஆக உத்திரமும் வருவதே ஆகும். 🔱 இதுமட்டுமல்லாது, பங்குனி உத்திரத்தில் பல்வேறு சிறப்புகள் நடைபெற்றிருப்பது இந்நாளை இன்னும் சிறப்பாக்குகிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 🔱 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம். 🔱 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தா...

புரட்சிகர மேதின நல்வாழ்த்துகள்

மே தினம் ஒரு தீபாவளி போல் புத்தாண்டு போல் ஒரு நாள் விடுமுறை களிப்பில் கரைந்து போகும் நாளா மேதினம்  நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டி சிறப்பு திரைப்படம்  பட்டி மன்றம்  குத்துப்பாட்டு கும்மாளம் என டிவி முன் கடந்து போகும் வழக்கமான பண்டிகை போன்றதா மே தினம் டாஸ்மாக் பார்களில் நண்பர்களோடு மயங்கிக் களிக்கவா இந்த மே தினம் திங்கட்கிழமையில் வந்ததால் சனி ஞாயிறையும் சேர்த்து மூன்று நாள் சுற்றுலாத் திட்டத்தில் அடங்கிப் போகும்  எளிய கேளிக்கை தகுதியுடையதா அது சினிமா தியேட்டரிலும் ஷாப்பிங் மால்களிலும் கூடி மாலையில் KFC யில் கோழிக்கால் கடிக்கும் குதூகலத்திற்கு கிடைத்த வாய்ப்பா மே நாள் விடுமுறை  ஒரு புத்தாண்டைப் போல் பரஸ்பரம் Happy may day சொல்லி கடக்கவா இந்நாள் உழைக்கும் மக்கள் சிந்திய உதிரத்தில் உதித்த தினமல்லவா இந்த மே தினம் அதில் தோய்ந்து உலகெங்கும் பறக்கும் செங்கொடியில் அதன் ரத்தக் கவிச்சி இன்னுமல்லவா இருக்கிறது அது நமது சென்ற நூற்றாண்டு பாட்டன்கள் பாட்டிகள் உயிர் மாய்ந்து  சிக்காகோ நகர வீதிகளில் சிந்திய உதிரமல்லவா  8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உ...

மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!

*சுமார் ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!* நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, நீங்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி, சுருக்கமாக, நீங்கள் ஒரு மனிதராக இருந்தால்..., கீழே உள்ள [மகாபாரதத்திலி ருந்து எடுத்து தொகுத்த..., மதிப்பு மிக்க] "9 முத்தான கருத்துகளை" படித்து புரிந்து கொள்ளுங்கள்; வாழ்வில், கடைபிடியுங்கள்.!! 1. உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை நீங்கள் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகிவிடுவீர்கள்... *"கௌரவர்கள்"* 2. நீங்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால், உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்... *"கர்ணன்"* 3. உங்கள் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி மொத்த அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு அலட்சியம் செய்யாதீர்கள்... *"அஸ்வத்தாமா...